இந்தியாவில் கரோனாவால் 5.24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

இந்தியாவில் கரோனாவால் 5.24 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்

புதுடில்லி, மே 9  கரோனா உயிரிழப்பு குறித்த உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவர குளறுபடிகள் ஆதாரங் களுடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் பகுதியில் கரோனா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அங்கிருந்து கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் வைரஸ் வியாபித்து பரவியது. சுமார் இரண்டரை ஆண்டுகளாக அடுத் தடுத்து கரோனா அலைகள் உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வரு கின்றன.

ஒன்றிய அரசின் புள்ளி விவரத்தின் படி இந்தியாவில் இதுவரை 5.24 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால் 2021 இறுதி வரையிலான காலத்தில் இந்தியாவில் 47 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. சுமார் 10 மடங்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுவதை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

புள்ளிவிவர குளறுபடி

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவர குளறுபடிகளை இந்திய புள்ளியல் துறை நிபுணர்கள் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளனர். 

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் கரோனா வைரஸால் ஒரு லட்சம் பேர் உயிரிழந் துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறி

யுள்ளது.  அந்த மாதத்தில் சீனா மற்றும் சில நாடுகளில் மட்டுமே கரோனா பரவல் உச்சத்தில் இருந்தது.

இந்தியாவில் கடந்த 2020 ஜனவரி 21ஆம் தேதிதான் கேரளாவில் முதல் கரோனா நோயாளி கண்டறியப் பட்டார். அந்த மாதத்தில் வெகு சிலரே கரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. 

அப்படியிருக்கும்போது கடந்த 2020 ஜனவரியில் இந்தியாவில் ஒரு லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந் திருப்பதாக கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவில் கரோனா பரவல் மிகக் குறைவாக இருந்தது.  ஆனால் குறிப்பிட்ட 3 மாதங்களில் மட்டும் 3.29 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.  இதேபோல அந்த அமைப்பின் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன என்று இந்திய புள்ளியல் துறை நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புள்ளிவிவர குளறுபடியை உலக சுகாதார அமைப்பே பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. 

உறுப்பு நாடுகளுடன் கலந்தா லோசித்து உயிரிழப்பு எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்று அந்த அமைப்பு உறுதி அளித்திருக்

கிறது.

No comments:

Post a Comment