தி.மு.க.வுக்கும், சிறுபான்மை மக்களுக்குமான உறவு எத்தகையது?: முதலமைச்சர் விளக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

தி.மு.க.வுக்கும், சிறுபான்மை மக்களுக்குமான உறவு எத்தகையது?: முதலமைச்சர் விளக்கம்

சென்னை, ஏப்.29 - தி.மு.க.வுக்கும், சிறு பான்மைச் சமுதாயத்துக்கும் இடையே இருப்பது நல் உறவு-  - நம்பிக்கை உறவு என்று கொளத்தூரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 1,600 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

ரமலான் மாதத்தில் செய்யும் உதவிகள் மனிதநேயத்தின் மறு உருவமாக காட்சியளிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டின் இந்த மனிதநேயம் நாடு முழுமைக்கும் ஒரு மாடலாக உருவாகியிருக்கிறது. இதுவும் ஒருவகை திராவிட மாடல்தான். இதை சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும், ஆத்திரம் வரும், கோபம் வரும். அதற் கெல்லாம் கவலைப்படவேண்டிய அவசி யமே இல்லை. எல்லோருக்கும் எல்லாம்-அனைவருக்கும் உதவி சேர வேண்டும் இதுதான் தி.மு.க.வின் கொள்கை. இதுதான் தி.மு.க.வினுடைய லட்சியம். அந்த அடிப்படையில்தான் திராவிட மாடல்... திராவிட மாடல் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கி றோம்.

நலத்திட்ட உதவிகள்

ஏழை-எளிய மக்களுக்கு ஜாதி, மத, இன வேறுபாடின்றி நலத்திட்ட உதவி களை வழங்கி வருகிறோம். நலத்திட்ட உதவிகள் மட்டுமல்ல கல்விக்கான உதவியும் தொடர்ந்து வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த 24ஆம் தேதி நடந்த இப்தார் நிகழ்ச்சியில் சிறுபான் மைச் சமுதாய மக்களுக்கு என்னென்ன பணிகளை? என்னென்ன திட்டங்களை? சாதனைகளை? தி.மு.க. ஆட்சி இருந்த போது செய்திருக்கிறோம், இப்போது செய்துகொண்டிருக்கிறோம், இன்னும் தொடர்ந்து செய்யப்போகிறோம் என்பதை விரிவாக, விளக்கமாக பேசியிருக்கிறேன். 2006ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து அந்த கூட்டணியின் தயவில் ஆட்சியில் இருந்தோம்.

அப்போது எதிர்க்கட்சியில் இருந்த அ.தி.மு.க., இது ஒரு மைனாரிட்டி ஆட்சி... மைனாரிட்டி ஆட்சி என்று விமர்சனம் செய்வது போல, கொச்சைப்படுத்தி பேசுவதுபோல, கிண்டல் செய்வதுபோல, கேலி செய்வது போல ஒரு கருத்தை தொடர்ந்து எடுத்து சொல்லிக் கொண்டி ருந்தார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் சட்டமன்றத் தில் எழுந்து பதில் சொன்னார், எங்களை பார்த்து நீங்கள் மைனாரிட்டி ஆட்சி... மைனாரிட்டி ஆட்சி என்று சொல் கிறீர்கள். உண்மைதான். மைனாரிட்டிக் களுக்காக நடைபெறும் ஆட்சிதான் இந்த ஆட்சி என்று அப்போது சொன் னார்.

தொப்புள் கொடி உறவு

இது தொப்புள் கொடி உறவு. அதனால்தான் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை கொண்டுவந்தபோது அதை எதிர்த்து அன்றைக்கு குரல் கொடுத்தோம், போராடினோம், எதிர்த்து வாக்கு களையும் போட்டோம். ஆனால் அதை மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தபோது சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த அவசர சட்டத்தை திரும்பப்பெறவேண்டும் என்று தீர் மானம் போட்ட கட்சிதான் தி.மு.க., தி.மு.க. ஆட்சி. எனவே எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது எதிர்த்தோம்.

ஆளுங்கட்சியாக வந்ததற்கு பிறகு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறை வேற்றினோம். தீர்மானத்தை முன் மொழிந்தவன்தான் முதல்-அமைச்சராக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த ஸ்டாலின். சிறுபான்மை மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன கட்சி யாரென்று உங்களுக்கு தெரியும். ஆனால் அந்த இடஒதுக்கீட்டை அளித்து அந்த 3.5 சதவீத இடஒதுக்கீட்டை தந்து டாக்டர்களாக, என்ஜினீயர்களாக, வக்கீல்களாக, பட்டதாரிகளாக சிறு பான்மை சமுதாயத்திலிருந்து தேர்ந் தெடுக்கப் பட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் காட்சியை பார்த்து பெருமைப்படுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம்.

நல் உறவு-நம்பிக்கை உறவு

சிறுபான்மை மக்களுக்கான பொரு ளாதார மேம்பாட்டுக் கழகத்தை முடக் கியது அ.தி.மு.க. ஆட்சி. ஆனால் அந்த மக்களுக்கு அந்த கழகத்தை மீண்டும் பொலிவோடு செயல்பட வைத்தது, சிறு பான்மை மக்களுக்கு பெரும் நலத்திட்ட உதவிகளை தொழில் தொடங்க நிதி உதவிகள் கிடைக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்த ஆட்சிதான் தி.மு.க.வின் ஆட்சி. எதிர்க்கட்சி வரிசையில் இருந் தாலும் சரி ஆட்சி பொறுப்பில் இருந் தாலும் சரி சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வருவதுதான் உங்கள் வீட்டுப் பிள்ளையான தி.மு.க.

தி.மு.க. உங்கள் வீட்டுப் பிள்ளை என்றால் அதில் நானும் உங்களில் ஒருவன். நான் எப்போதும் உங்களோடு இருக்கக்கூடியவன். 

நீங்களும் எப்போதும் என்னோடு இருக்கக்கூடியவர்கள். அது தான் தி.மு.க.வுக்கும், சிறுபான்மைச் சமுதாயத் துக்கும் இடையே இருக்கும் நல் உறவு-நம்பிக்கை உறவு.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment