தஞ்சை, ஏப்.4 நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை பிரச்சார பெரும்பயணத்தில் ஏப்ரல் 8 அன்று மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது என தஞ்சை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை செயலாக்கும் வகையில் தஞ்சை மாநகரம் முழுவதும் சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது.
திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடை வீதி வசூல் பணியை மேற்கொண்டனர். இந்நிகழ்வினை தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தொடங்கிவைத்தார்.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் அரங்கராசு, மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ப.விஜயக்குமார், மாநகர இளைஞரணி தலைவர் அ.மதன்ராஜ், மாவட்ட மாணவர் கழக தலைவர் இரா.கபிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment