பச்சைப் பசேல் என்று இருக்கக்கூடிய பசுமைக்கு சூரிய வெளிச்சம் அறிவியல் ரீதியாக முக்கியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

பச்சைப் பசேல் என்று இருக்கக்கூடிய பசுமைக்கு சூரிய வெளிச்சம் அறிவியல் ரீதியாக முக்கியம்!

 அதுபோல  பெரியாருடைய கருத்துகள் 

போய்ச் சேர்ந்தால் புதிய சமுதாயம் மலரும்!

21 மொழிகளில் பெரியார் ஏன்? தொடர் 2:  தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

சென்னை, ஏப்.30 பகலவனின் வெளிச்சம் உலகெலாம் செல்லவேண்டும். அதனுடைய கதிர்கள் எங்கும் செல்லும். அதுதான் பலரை வாழ வைக்கும். இன்றைக்குப் பச்சைப் பசேல் என்று இருக்கக்கூடிய பசுமைக்கு சூரிய வெளிச்சம் முக்கியமல்லவா - அறிவியல் ரீதியாகவே! அதுபோல, பெரியாருடைய கருத்துகள் போய்ச் சேர்ந்தால், புதிய சமுதாயம் மலரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

21 மொழிகளில் பெரியார் - ஏன்?  சிறப்புக் கூட்டம்

கடந்த 28.3.2022 அன்று மாலை காணொலிமூலம் ‘‘21 மொழிகளில் பெரியார் - ஏன்?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பெரியார் ஒரே வார்த்தையில் சொன்னார் - பிறவி பேதம் கூடாது என்று.

அது ஜாதியினால் விளைந்த பேதமாக இருக்கலாம் அல்லது ஆண் பிறவி, பெண் பிறவி என்ற பிறவி பேதம்.

‘An Uncertain Glory - India and its Contradictions’ - Jean Dreze & Amartya Sen

This is another example of the mutual reinforcement of different inequalities (in this case of caste and gender inequalities). Many of India’s radical thinkers and reformers, from the 18th century onwards if not earlier, clearly perceived the complementarity between gender and caste hierarchies as well as the difficulty of destroying one without the other. The fiercest critics of the caste system were often far ahead of their times in defending women’s rights. Tarabai Shinde, Jotirao Phule, B. R. Ambedkar and Periyar are some examples, among others.

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘நிச்சயமற்ற பெருமை இந்திய நாடும் அதன் முரண்பாடுகளும்‘‘ - ஜீன் ட்ரசே மற்றும் அமர்த்தியாசென் ஆகியோரது நூல் குறிப்பு.

இது (இந்திய நாட்டில் நிலவுவது) பலதரப்பட்ட சமத் துவமின்மையின் பரஸ்பர அழுத்தமிகு நடைமுறை யாகும் (ஜாதி மற்றும் பாலின சமத்துவமின்மை). 18 ஆம் நூற்றாண்டிலிருந்து தோன்றிய புரட்சிகர சிந்தனை யாளர்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் பாலின, ஜாதி அடிப்படையிலான சமத்துவமின்மையின் ஒன்றுக் கொன்றுள்ள தொடர்புபற்றிய தெளிவான புரிதலோடு, இவையிரண்டில் ஒன்றைத் தவிர்த்து மற்றதை அழித்து விட முடியாது என்பதையும் அறிந்தே வந்துள்ளனர். ஜாதி கட்டமைப்புபற்றி கடுமையாக விமர்சிப்பவர்களும் பெண்களது உரிமைகளைப் பொறுத்த அளவில் காலத் திற்கு முன்பான சிந்தனையாளர்களாகவே இருந்துள் ளனர். தாராபாய் ஷிண்டே, ஜோதிராவ் பூலே, பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஆகியோரை எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம்.’’

பெரியார் உலகப் பெரியார். சூரியனை கையைக் காட்டி மறைத்துவிடலாம் என்றோ, வீட்டிற்குள் சென்று விட்டால், சூரியன் போய்விடும் என்றோ அர்த்தமல்ல.

பகலவனின் வெளிச்சம் 
உலகெலாம் செல்லவேண்டும்

பகுத்தறிவுப் பகலவன் அவர். அந்தப் பகல வனின் வெளிச்சம் உலகெலாம் செல்லவேண்டும். அத னுடைய கதிர்கள் எங்கும் செல்லும். அதுதான் பலரை வாழ வைக்கும்.

இன்றைக்குப் பச்சைப் பசேல் என்று இருக்கக் கூடிய பசுமைக்கு சூரிய வெளிச்சம் முக்கியமல்லவா - அறிவியல் ரீதியாகவே! அதுபோல, இந்தக் கருத் துகள் போய்ச் சேர்ந்தால், புதிய சமுதாயம் மலரும்.

பழைமையை எந்த அளவிற்குப் பயன்படுத்த முடியுமோ, அந்த அளவிற்குப் பயன்படுத்தி யிருக்கிறார்.

பெரியாருடைய சிந்தனையை, குன்றக்குடி அடி களார் மிக அழகாக எடுத்துச் சொல்வார்.

பழைமையை உரமாகப் பயன்படுத்தவேண்டும் என்று சொன்னார். ஆனால், என்ன கோளாறு என்றால், பழைமையை உரமாகப் பயன்படுத் துவதில்  நமக்கு எந்தவிதமான மறுப்பும் கிடையாது. ஆனால், உணவாகப் பயன்படுத்தவேண்டும் என்கிறார்கள். அதுதான் கோளாறு.

திராவிடப் பண்ணையம்

நிலத்திற்கு உரம் போடுவோம், உங்களுக்கும் தெரியும். கழிவுப் பொருள்கள் எல்லாம் உரமாக இடப்படும். அதுபோன்று பெரியாருடைய இயக்கத்திற்கு எதிர்ப்புகள், கழிவுப் பொருள்களையெல்லாம் உர மாக்கிக் கொண்டார்.

அப்படி உரமாகப் போட்டதினால்தான், திராவிடப் பண்ணையம் செழிப்பாக வளர்ந்துகொண்டிருக்கக் கூடிய சூழல்.

அதுபோன்று 

வி.எஸ்.நெய்பால் எங்களுடைய வீட்டிற்கு வந்தார். பெரியாரைப்பற்றி எழுதியிருக்கிறார். அவர் பெரியாரைப் பார்த்திராதவர்.

அவர் நோபல் பரிசு வாங்குவதற்கு முன்னால் எழுதப் பட்ட புத்தகம். 1973 இல் அய்யா அவர்கள் மறைந்து விட்டார். அவருடைய இயக்கத்தை நாம் நடத்துகின் றோம் என்பதால், பெரியார் திடலுக்கு வந்து என்னைப் பேட்டி கண்டவர்.

A garlanded black statue of Periyar stood in the middle of the big sandy plot, with this inscription on the plinth: PERIYAR THE PROPHET OF THE NEW AGE THE SOCRATES OF SOUTH EAST ASIA FATHER OF THE SOCIAL MOVEMENT AND ARCH ENEMY OF IGNORANCE; SUPERSTITIONS; MEANINGLESS CUSTOMS AND BASELESS MANNERS. Periyar’s grave was in a corner of the plot. All around the grave were polished grey granite slabs engraved with some of Periyar’s sayings. One of those sayings, virtually an incantation, was very famous: There is no God. There is no God. There is no God at all. He who invented God is a fool. He who propagates God is a scoundrel. He who worships God is a barbarian. This was how Periyar began all his discourses.

உலகளவில் பெரியாருடைய சிந்தனை என்பது - அது, நோபல் பரிசு பெற்ற அறிஞர்களால் உலகளாவிய நிலைக்குச் சென்றுள்ளது.

குன்னர் மிருடல்

அமெர்த்தியா சென்

ஜீன் ட்ரசே ஆகியோரால்.

நம்முடைய  சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியில் அமைக்கப்பட்டு இருக்கின்ற பொருளாதாரக் குழுவில் ஜீன் ட்ரசேவும் இருக்கிறார்.

இப்படி பல பேர் வந்திருக்கிறார்கள்.

பெரியார் அவர்களுடைய சிந்தனை என்பது வெறும் தத்துவார்த்தங்கள் அல்ல!

பெரியார் அவர்களுடைய சிந்தனை என்பது வெறும் தத்துவார்த்தங்கள் அல்ல. அண்ணா சொன்னார் பாருங்கள்,

‘‘உங்கள் காலத்திலே எந்த ஒரு சமுதாய புரட்சி யாளரும், அவருடைய கொள்கையினுடைய வெற்றி, அவருடைய காலத்தில் வந்ததில்லை’’ என்று சொன்னார்.

அது உண்மை.

ஆனால், அவர் அதை அனுபவிக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு மட்டும்தான் கிடைத்தது என்பது எவ்வளவு உண்மை என்பதற்கு உதாரணம்,

நம்முடைய நாட்டில் நாம் பார்ப்பதைவிட, இன் னொரு செய்தியை உங்களுக்குச் சொல்லவேண்டும்.

இந்த புத்தகம் - சிங்கப்பூரில் மிக முக்கியமாக இருக்கக் கூடிய பல்கலைக் கழகங்களில் மிக முக்கியமான முதல் பல்கலைக் கழகம் - அரசே முன்னின்று நடத்து கின்ற தேசிய பல்கலைக் கழகம்தான்.

Indians in Singapore (1819-1945) 

Diaspora in the Colonial Port City

அந்தப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக் கக்கூடியவர் ராஜேஷ் ராய் என்பவர். அவர் சிங்கப்பூரியர்.

அவர், ndians in Singapore (1819-1945) Diaspora in the Colonial Port City   என்ற தலைப்பில் செய்த ஆய்வுக் கட்டுரை  புத்தகமாக வெளிவந்தது.

அந்த தேசியப் பல்கலைக் கழகத்திற்கு நான் அழைக் கப்பட்டேன். அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் அய் யாவைப்பற்றி, நம்முடைய இயக்கத்தைப்பற்றி பேச வாய்ப்பளித்தார்கள்.

பேராசிரியர்கள் அமர்ந்துகொண்டு கேள்வி கேட் பார்கள். அந்த நிகழ்வில் ராஜேஷ் ராய் அவர்கள் என்னை சந்தித்தார். பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்கள் என்னிடம் அவரை அறிமுகப்படுத்தி வைத் தார். அப்பொழுதுதான் அந்த புத்தகம் வெளிவந்தது என்று எனக்கு வாங்கிக் கொடுத்தார்.

அந்த நூலில்,

Dravidian populism contained a variety of strands, of which the most significant in the inter-war years was the Self-Respect Movement organized in 1926 by E. V. Ramasamy Naicker - often referred to by the honorific ‘Periyar’. The Movement  had a robust anti-Brahminical stance, and  ‘denounced caste observances, child marriage, and enforced widowhood. Over time Periyar developed a comprehensive programme ‘dedicated to [the] moral, religious and social reform’ of  Tamil society.   His views were propagated through numerous Tamil journals, including Kudiarasu, Puratchi, Pakutharivu, and Vidudhalai.   Although initially independent of a direct political affiliation, the Self- Respect  Movement’s programme shared commonalities with the ideology of the South Indian Liberal Federation (better known as the Justice Party), which had been established in Madras in 1917. The Justice Party’s fervent opposition to ‘Brahmanical tyranny’, and its emphasis on breaking down caste barriers and uplifting depressed castes, drew considerable support from middling and lower-caste Tamils and Telugus in Madras.

By the late 1920s, the circulation of journals and the movement of people to and from the Presidency had facilitated the spread of Dravidian consciousness amongst Tamils in Singapore. Propagators of the Movement in Singapore and the Peninsula included Tamil journalists, schoolmasters, and vernacular-educated kanganis, who were inspired by the notion of social and religious reform and the upliftment of the lower-castes. Periyar’s visit to Singapore and the Peninsula in December 1929 and January 1930, on the invitation of a young Singapore-based Tamil  writer-Thamizhavel G. Sarangapani - was monumental in galvanizing the Movement here.  During his tour, packed audiences witnessed Periyar’s delivery of scathing attacks on the caste system, and were inspired by his call for an end to deep-seated social inequalities in Tamil society, and the necessity for Tamils in Malaya to unite and join the Movement by establishing ‘self-respect associations’.

 Periyar’s visit galvanized   the formation of the Tamils Reform Association (TRA) in Singapore in 1932. Early leaders of the TRA  included Sarangapani,  A. C. Suppiah, Damodaran Pillai, and Nagalingam mudaliar. The Association’s objectives drew directly from the ideology of the Self Respect Movement: 

To promote the welfare of Tamils of both sexes;... to promote the attainment social equality among all Tamils by the abolition of all distinctions based on birth;... to raise the social status of Tamil women and afford them all their due rights and privileges and... to encourage thrift economy and temperance ... among Tamils. 

Prior to 1935, the TRA was not a particularly effective unit and had less than 100 members. The organization would probably have ceased if not for the patronage of a small coterie of Tamil businessmen. Most members were young adults educated in the Tamil medium and drawn from the middle and lower middle class. Tamil conservatives and even the Adi Dravidas avoided the early TRA due to concerns that it was ‘atheistic’ and ‘radical’ in its social orientations. In its first three years, the Association did, however, make some headway in cultivating links with other Tamil associations in Singapore by facilitating combined meetings. This enabled the TRA to gain support for the formation of a Tamils Representative Council (TRC) in 1933, aimed at representing Tamil demands collectively to the Government.

In 1935, the TRA set up its inaugural office at rental premises in Klang Road, and commenced publishing the Tamil Murasu, which became its mouthpiece. The newspaper’s circulation increased rapidly. Subscribers were drawn to its highly emotive editorials that were acrid in denouncing Brahmins, Brahmanical Hinduism, and the caste system that were cited as the key reasons for the lost glory of the Tamil civilisation,’


இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘நீண்ட காலமாக நலிவுற்றுக் கிடந்த ஏழை எளிய மக்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்ப திராவிடச் சிந்தனைகளும் அணுகுமுறைகளும் என்றுமே தவறிய தில்லை. அந்த வகையில் 1926 ஆம் ஆண்டு ஈ.வெ.ராமசாமி நாயக்கர் துவக்கிய சுயமரியாதை இயக்கம் குறிப்பிடத்தக்க சாதனையாகும். பெரியார் என்று தனிப்பட்ட மதிப்புடன் பரவலாக அழைக்கப்படும் இவர் துவக்கிய இந்த இயக்கம் பார்ப்பனர்களை தீவிரமாக எதிர்த்து, ஜாதிபாகுபாடுகள், பால்ய விவாகம் போன்ற கொடுமைகளை ஒழிக்கவும் போராடியது. கைம்பெண் களின் மறுமணத்தையும் ஆதரித்து வலியுறுத்தியது.

மதவெறியையும் ஒழுக்கக்கேடுகளையும் அழித்து, தமிழர் சமுதாயத்தைத் திருத்தி சீர்படுத்த நாளடைவில் பெரியார் பல திட்டங்களை அறிவித்து நல்ல மாற்றங் களுக்கும் வழிவகுத்தார். ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ உட்பட பல பத்திரிகைகள் வாயிலாக அவர் தன் சிந்தனைகளையும் கொள்கைகளையும் பரப்பி வந்தார். பிரச்சார பணிக்கு அவை பெரிதும் உதவிபுரிந்தன.

தென்னிந்திய நல உரிமைச்சங்கம்

ஆரம்பத்தில் எந்த ஒரு அரசியல் அமைப்புடனும் இணையாமல் தனித்தே செயலாற்றி வந்தாலும், தென் னிந்திய நல உரிமைச் சங்கத்தின் கொள்கைகளோடு சுயமரியாதை இயக்கத்திற்கு இணக்கம் ஏற்பட்டது. South Indian Liberal Federation (SILF) என்ற இந்தச் சங்கம்தான் பின்னர் நீதிக்கட்சியாக பரவலாக அறியப் பட்டது. சென்னை மாகாணத்தில் 1917 ஆம் ஆண்டு உருவான தென்னிந்திய நல உரிமைச்சங்கம் பார்ப்பனிய கொடுங்கோன்மையை கடுமையாக கண்டித்து எதிர்த்து வந்தது.

ஜாதிபாகுபாடுகள் எனும் தடைக் கற்களை தகர்த் தெறியவும், ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத் திற்கு வழிவகுக்கவும், தீவிரமாக அவற்றை வலியுறுத்தி போராடியது நீதிக்கட்சி. தமிழ், தெலுங்கு பேசிய நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதியினர், அன்றைய மதராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சியின் நற்பணிக்கு சிறப்பான ஆதரவளித்தனர். 

பத்திரிகைகள் மூலமாகவும், சென்னை மாகாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் மூல மாகவும், திராவிட உணர்வு சிங்கப்பூர்வாழ் தமிழர்கள் மத்தியில் எளிதாகப் பரவியது. சிங்கப்பூர் மற்றும் தீபகற்ப நாடுகளில் வசித்த இயக்கத் தொண்டர்கள் திராவிடச் சிந்தனைகளை அங்கிங்கெனாதபடி பரப்பி பிரச்சாரம் செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றம், சமூகச் சீர்திருத்தம் - இவ்விரண்டையும் பெரிதும் வர வேற்ற தமிழ் பத்திரிகையாளர்களும், பள்ளி ஆசிரியர் களும் ஆர்வத்துடன் இந்த நற்பணியில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் தமிழ் எழுத்தாளர் தமிழ வேள் சாரங்கபாணியின் அழைப்பை ஏற்று பெரியார்,  சிங்கப்பூர் மற்றும் தீபகற்பங்களுக்கு பரப்புரைப் பயணம் மேற்கொண்டார். 1929 டிசம்பர் முதல் 1930 ஜனவரி வரை அந்தப் பயணம் நீடித்தது. பெரியாரின் இந்த பரப்புரைப் பயணம் சுயமரியாதை இயக்கத்தின் மேன்மையை மின்சார வேகத்தில் எல்லாதிசைகளிலும் பரப்பிற்று. பெரியாரின் இந்த சுற்றுப்பயணத்தின் போது அவருடைய உரையைக் கேட்க மக்கள் பெருங்கூட்டமாகத் திரண் டனர். ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராக காரசாரமாக அவர் முழங்கிய போதெல்லாம் அவர்கள் பரவச மடைந்தனர். தமிழர் சமூகத்தில் வேரூன்றிக் கிடந்த ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முன்வரும்படி அவர் விடுத்த அழைப்பை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர் மக்கள். சுயமரியாதை அமைப்புகளை பல்வேறு நகரங்களில் அமைக்கும்படி மலேசிய வாழ்தமிழர்களுக்கு பெரியார் விடுத்த வேண்டுகோளை அனைவரும் ஏற்றுக் கொண்டு, ஒன்றிணைந்து உழைப்பதாக உறுதியளித்தனர்.

‘தமிழர் சீர்திருத்த சங்கம்’

பெரியாரின் பரப்புரைப் பயணம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக 1932 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் ‘தமிழர் சீர்திருத்த சங்கம் (’Tamils Reform Association - TRA) என்ற அமைப்பு) உருவாயிற்று. ஆரம்ப காலத் தின் இதன் தலைவர்களாக சாரங்கபாணி, சுப்பையா, தாமோதரன், நாகலிங்கம் - ஆகியோர் பதவி வகித்தனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்டே இந்தச் சங்கம் செயல்பட்டு வந்தது. அதன் நோக்கங்கள் கீழ்கண்டவாறு இருந்தன.

1. தமிழர்களின் நல்வாழ்வு

2. சமூகநீதி 

3. பிறவிப்பேத ஒழிப்பு

4. பெண்களுக்கு சம உரிமைகள்

5. பெண்களின் வாழ்வாதார உயர்வும் வளமும்.

6. சிக்கனமாக தமிழர்கள் வாழும்படி செய்தல்.

1935 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழர் சீர்திருத்த சங்கத்தின் (TRA)  செயல்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இருக்கவில்லை. உறுப்பினர்களின் எண்ணிக் கையே நூற்றுக்கும் குறைவாகத்தான் இருந்தது. தமிழ் வணிகர்களின் சிறிய குழு ஒன்று மட்டும் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் அந்த சீர்திருத்த சங்கம் என்றோ செயலற்றுப் போயிருக்கும். அந்தக் குழுவில் பலர் தமிழ்வழிக் கல்வி பயின்ற நடுத்தர வகுப்பு இளைஞர்கள்.

ஆதி திராவிடர்கள் உட்பட பல பழமைவாத தமிழர்கள் இந்தச் சங்கத்தை ஆரம்பத்தில் தவிர்த்து வந்தனர். அதிரடி மாற்றங்களையும் நாத்திகவாதத்தையும் அந்த பழைமைவாதிகள் ஏற்கவில்லை. சமூகத்தில் எந்த மாற்றத்தையும் அவர்கள் வரவேற்கவில்லை. இருப் பினும் சீர்திருத்த சங்கம் தன் முயற்சிகளை கைவிட வில்லை.

’தமிழர் பிரதிநிதித்துவக் குழு’ 

சிங்கப்பூரில் உள்ள இதர தமிழர் அமைப்புகளுடன் இணைந்து பொதுக்கூட்டங்கள் நடத்தியது இந்த சங்கம். அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் TRA  சங்கம் தீவிரமாக ஈடுபட்டு இயன்றவரை போராடி வந்தது. இதன் மூலம் சங்கத்தினர் வெற்றியடைந்தனர். மக்களின் ஆதரவைப் பெற்று 1933 ஆம் ஆண்டு TRC (Tamil Representative Council) ’’தமிழர் பிரதிநிதித்துவக் குழு’ என்ற வேறொரு அமைப்பை உருவாக்கி, முன்னேற்றப் பாதையில் அடுத்த கட்டத்திற்குச் சென்றது தமிழர் சீர்திருத்த சங்கம் (ஜிஸிகி).  தமிழர்களின் கோரிக்கைகளை அரசுக்குத் தெரியப்படுத்தி தீர்வு காண்பதே இந்த ஜிஸிசி எனும் புதிய அமைப்பின் நோக்கமாக இருந்தது.                          

  (தொடரும்)


No comments:

Post a Comment