விழுப்புரம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

விழுப்புரம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு; இளைஞரணி சார்பில் கிராமப் பிரச்சாரம் நடத்திட தீர்மானம்

விழுப்புரம், ஏப்.4 விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் சேந்தநாடு பெரியார் தோட்டத்தில் 2.4.2022 அன்று நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் .பகவான்தாஸ் வரவேற் புரையாற்றினார். மாவட்ட இளைஞரணித் தலைவர் . பழனிவேல் லைமை வகித் துப் பேசினார். திண்டிவனம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் கடவுள் மறுப்பு கூறினார்.

விழுப்புரம் மாவட்டத் தலைவர்

. சுப்புராயன், மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன், மண்டல இளைஞரணி செய லாளர் தா. தம்பிபிரபாகரன், பகுத்தறிவாளர் கடிகப் பொறுப்பாளர் கி.ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.

நிறைவாக, மாநில இளைஞரணி செய லாளர் .சீ. இளந்திரையன் கூட்டத்தின் நோக்கம் குறித்தும். ஏப்ரல் 11 ஆம் தேதி திண்டிவனம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிப்பது தொடர்பாகவும், கழக இளைஞரணி சார்பில் கிராம பிரச்சாரக் கூட்டங்களை நடத்தவேண்டும் என்பதையும் விளக்சிப் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

இரங்கல் தீர்மானம்: விழுப்புரம் மண்டலத் தலைவராகப் பணியாற்றிய சுயமரியாதைச் சுடரொளி .மு. தாஸ், திண்டிவனம்  மாவட்டத் தலைவர் சுயமரியாதைச் சுட ரொளி கந்தசாமி,  திண்டிவனம் நகரத் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி பெத்தண்ணன் ஆகியோர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களுக்கு வீரவணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2: ஏப்ரல் 11 ஆம் நாள் திண்டிவனம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு  விழுப்புரம் மாவட்ட இளைஞரணி சார்பில் உற்சாக வரவேற்பளிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3: விழுப்புரம் மாவட்ட இளை ஞரணி சார்பில் புதிய இளைஞர்களை இணைத்து இளைஞரணியை வலுப்படுத் துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 4: புதிய பொறுப்பாளர்கள்: மாவட்ட இளைஞரணித் தலைவர், களத் தூர் .பகவான்தாஸ் இளைஞரணிச் செயலாளர் விழுப்புரம் சதிஷ், இளைஞரணி அமைப்பாளர் ஈஸ்வரகண்டநல்லூர் பகலவன் குணா.விக்னேஷ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் களத்தூர் சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர், கூ.கள்ளக்குறிச்சி - தினேசு ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதே போல், விழுப்புரம் நகர கழகச் செயலாளராக .பழனிவேல், விழுப்புரம் மாவட்ட . செயலாளராக கி.ஜானகிராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கூட்டத்தில் . பொறுப்பாளர் இராவணன், விழுப்புரம் நகரச் செயலாளர் சதிஷ், அத்தீட்ஸ், விழுப்புரம் நகரத் தலைவர் பூங்கான், ஈஸ்வரகண்ட நல்லூர் மணிவண்ணன், களத்தூர் சிறீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் பொதுக் கூட்டத்திற்கு நன்கொடை அளித்தோர்:

விழுப்புரம் மாவட்டத் தலைவர் .சுப்புராயன் - ரூ. 2000, மாவட்டச் செயலாளர் அரங்க. பரணிதரன் - ரூ. 5000, இராவணன் - 1000, கி.ஜானகிராமன் - 2000, கோ.பூங்கான் - ரூ. 1000, விழுப்புரம் .பழனிவேல் - ரூ. 1000, .சதிஷ் - ரூ. 1000, கூட்டத்தின் முடிவில் விழுப்புரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பகலவன் குணா. விக்னேஷ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment