ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 23, 2022

ஒற்றைப் பத்தி

'விஜயபாரதம்!'

கேள்வி: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - உணர்த்தும் நீதி என்ன?

பதில்: கழற்றிவிட்டால் வண்டி குடை சாயும் - இது .தி.மு..வுக்கு. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை - இது பா...வுக்கு. நண்பர் களை மிரட்டியே காரியம் செய் - இது தி.மு..வுக்கு.

- ‘விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். வார இதழ்

அப்படியா? பா...வு டன் கூட்டணி வைக்காததால் .தி.மு.. குடை சாய்ந்ததாம் - .தி.மு.. இதற்குப் பிறகா வது புத்திகொள்முதல்  பெறுமா? முயன்றால் முடியாததும் இல்லை - இது பா...வுக்காம். ஏன் முயலவில்லை? முயன்று பார்த்துதானே மண்ணைக் கவ்வினர்; ஒரே ஒரு ஓட்டு வாங்கிஉலக  சாதனை' படைத்த கட்சி பா...வாயிற்றே!

மிரட்டியே காரியம் செய் - இது தி.மு..வுக்காம்.

யாரை மிரட்டியதாம் தி.மு..? மிரட்டினால் தொடை நடுங்கும் அளவுக்கான கோழைகள் யார்? அர்த்தமற்ற வார்த் தைகளைக் கொட்டி வெளி யிடுவதற்கு ஒரு வார இதழா?

நல்ல தமாஷ்!

கேள்வி: இந்தப் பிறவி யின் நற்பலனை இப்பிறவி யிலேயே அடைய முடியுமா?

பதில்: இந்தப் பிறப்பு முற்பிறப்பின் அடிப் படையிலேயே அமைகிறது. முற்பிறவியின் பாவங்களை இந்தப் பிறவியில் அனு பவித்தே தீரவேண்டும். புண் ணிய பலன்களை இப்பிறப் பில் அனுபவிக்க முடியும்.

- ‘விஜயபாரதம்', ஆர்.எஸ்.எஸ். வார இதழ்

அப்படியா? காஞ்சி சங்கராச்சாரியார் கொலை வழக்கில் ஜெயிலுக்குப் போனதுகூட போன ஜென்மத்தில் செய்த பாவங்களால்தானா?

போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தமையால் பிர்மாவின் நெற்றியில் பிராமணன் பிறக்கிறான். போன ஜென்மத்தில் செய்த பாவத்தால் இந்தப் பிறவியில் சூத்திரன் பிறக்கிறான் - பஞ்சமன் பிறக்கிறான் என்று சொல்லக்கூடியவர்கள் அல் லவா!

காந்தியார் கொலை செய்யப்பட்டதும்கூட அவர் கள் கணக்கில் இதுதானே!

காந்திஜி மரணத்திற்கு ஒரு ஹிந்துவே காரண மாயிருப்பது ஹிந்து சமூகத்திற்கே ஏற்பட்ட பேரவமானம். அத்தகைய மகானைச் சுட்டுக்கொன்ற பாவம் நம் ஹிந்து சமூகத் தையும் சூழ்ந்துள்ளது. தோஷத்துக்கெல்லாம் பரிகாரம் ஸ்நானம்தான்.

- காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ் வதி, காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டபோது கூறியது.

எவ்வளவு தந்திரம் - ஒரு கொலைக்கு ஒரு பரிகாரம் - ஒரே ஒரு முழுக்குதானாம் (ஸ்நானம்தானாம்).

காந்தியார் சுட்டுக் கொல் லப்பட்டதற்குக் காரணம் போன ஜென்மத்தில் செய்த பாவம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழ்விஜயபாரதம்' சொல்லக் கூடும்.

மனிதநேயமற்ற இந்தக் குப்பைகளைக் கூட்டி ஒதுக்கவேண்டாமா?

 - மயிலாடன்

No comments:

Post a Comment