சென்னை, மார்ச் 25- திமுகவுடன் இணக்கமாகச் சென்று கொண் டிருக்கிறோம். மதிமுக தொடர்ந்து உறுதியாகச் செயல்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித் தார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள விஜய் சிறீமகாலில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் 23.3.2022 அன்று நடந் தது. கூட்டத்துக்கு பிறகு செய்தி யாளர்களிடம் வைகோ கூறிய தாவது:
மொத்தமுள்ள 1,490 உறுப் பினர் களில் 1,254 பேர் பொதுக் குழுவில் பங்கேற்றனர். மதிமுக எடுத்த அரசி யல் நிலைப்பாட் டில் உறுதியுடன், திமுக லட் சியங்கள் கோட்பாடு களின் வெற்றிக்கு தொடர்ந்து துணை யுடன் நின்று பாடுபடு வது என கூட் டத்தில் தீர்மானிக்கப்பட் டது. ‘நீட்' விலக்கு சட்ட மசோ தாவை உடனடியாக, குடி யரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண் டும்.
காவிரியின் குறுக்கே மேகே தாட்டுவில் தடுப்பு அணை கட்டு வதற்கு கருநாடக மாநில அரசுக்கு, ஒன்றிய அரசு துணை போகக் கூடாது. முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் என்று கேரள அரசு, ஆளுநர் உரையில் அறிவித்திருப்பது கடும் கண்டனத் துக்குரியது. கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவுகளை சேமித்து வைக்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது. துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் விருப்ப உரிமையை தவிர்க்கும் வகையில், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, உரிய சட்டத் திருத்தத்தைச் செயல் படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை திரும் பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்க ளின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் :
நிர்வாகிகள் சிலர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில் லையே?
கட்சிக்குத் துரோகம் நினைப்பவர்கள் பொதுக்குழு கூட்டத்துக்கு வரவில்லை. அவர்கள் அவதூறு பேசி வரு கின்றனர்.
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று அதிருப்தி மாவட்டச் செயலா ளர்கள் கூறி வருகிறார்களே?
இந்தக் கட்சி என்றைக்கும் நிலைநாட்டப்பட்டு உறுதி யாக இருக்கும்.
வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை தொடங் கிய வைகோ இன்றைக்கு.....?
பழைய சம்பவங்களை தற்போது கிளற வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. தற்போது திமுகவுடன் நல்ல இணக்கமான சூழ்நிலை உருவாகி இருக் கிறது. அந்த இணக்கத்துடன் நாங்கள் சென்று கொண்டிருக் கிறோம்.
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கூட்டத்தில் கலந்துகொள்ளவில் லையே?
அதிமுகவுடன் சென்றால் தான் நல்லது என்ற கருத்தை அவர் கடந்த கூட்டத்தில் சொன்னார். அதற்கு வாய்ப்பே கிடையாது என்று சொன் னேன். மதிமுக சட்ட திட்ட விதிகளின்படி பொதுச்செய லாளருக்குதான் அதிகாரம் இருக்கிறது.
துரை வைகோ கட்சிக்காக உழைக்கவில்லை என்று அதிருப்தியாளர்கள் கூறி இருக்கிறார்களே?
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காலகட்டத்தில் கட் சியில் அவர்தான் சேவை செய் தார். தொண்டர்கள் விருப்பப் படிதான் இந்த பொறுப் புக்கு வந்திருக்கிறார். அவருக்கு 100 சதவீதம் ஆதரவு இருக்கிறது.
அதிருப்தியாளர்கள் கட்சி யில் இருந்து நீக்கப்படுவார் களா?
யாரையும் இழக்க நான் தயாராக இல்லை. இதுவரை கட்சியில் இருந்து யாரையும் புண்படுத்தி நான் அனுப்பிய தில்லை.
இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:
Post a Comment