தானாகவே மின்னேற்றம் பெறும் மின்சார இருசக்கர வாகனம் மதுரை மாணவர் கண்டுபிடித்து சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

தானாகவே மின்னேற்றம் பெறும் மின்சார இருசக்கர வாகனம் மதுரை மாணவர் கண்டுபிடித்து சாதனை

மதுரையை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் சைக்கிளை மின்சார இருசக்கர வாகனமாக உருமாற்றியுள்ளார். 

கல்லூரியில் எம்.எஸ்.சி படிக் கும் தனுஷ்குமார் தனது தங்கைக்கு அரசுப்பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை, தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மின்சார இருசக்கர வாகனமாக  உருமாற்றி யுள்ளார். இந்த இருசக்கர வாகனம் ஓடும்போது தானாகவே மின்னேற்றம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பைக் அதிகபட்ச மாக 40 கி.மீ தூரம் வரை செல்லும் என்றும், 20 கி.மீ சென்றால் தானா கவே பேட்டரி முழுதாக சார்ஜ் ஏறிவிடும் எனவும் தனுஷ்குமார் கூறியுள்ளார்.

ஆனால் இந்த இருசக்கர வாகனம் பயன்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் சான்றிதழ் அவசியம் என்பதால் இதனை சாலைகளில் ஓட்டி செல்ல முடி யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment