அய்.நா. பொதுச்சபையின் சிறப்பு அவசர கூட்டத்தில் ரசியா-உக்ரைன் மோதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 1, 2022

அய்.நா. பொதுச்சபையின் சிறப்பு அவசர கூட்டத்தில் ரசியா-உக்ரைன் மோதல்

 நியூயார்க், மார்ச் 1- உக்ரைன் மீது ரசியா போர் தொடுத்துள்ள நிலையில், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அய்.நா. பொதுசபையின் சிறப்பு அவசர கூட்டம் நடந்தது. இதில் ரசியா, உக்ரைன் இடையே மோதல் ஏற்பட்டது.

குறிப்பாக, கூட்டத்தில் பேசிய உக்ரைன் தூதர் செர்ஜிய் கிஸ்லிட்சியா, ரசியா மீது குற்றம் சாட்டினார். அப்போது அவர், ‘இந்த பிரச்சினையில் உக்ரைன் தப்பவில்லை என்றால், அய்.நா.வும் தப்பாது. இந்த பிரச்சினையில் ஜன நாயகம் தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது’ என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ரசிய தூதர் வாசிலி நபென்சியா, இந்த பிரச்சினைக்கு மூல காரணமே உக்ரைன்தான் என குற்றம் சாட்டினார். மின்ஸ்க் ஒப்பந்தத்தின் கீழ் அதன் நேரடி கடமைகளை பல ஆண்டு களாக உக்ரைன் மீறி வருவதாகவும் தெரிவித்தார். இந்த வார்த்தை மோதலால் அய்.நா.வில் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:

Post a Comment