நீர் மேலாண்மையில் தேசிய அளவில் 3ஆவது இடம் தமிழ்நாடு அரசுக்கு விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

நீர் மேலாண்மையில் தேசிய அளவில் 3ஆவது இடம் தமிழ்நாடு அரசுக்கு விருது

புதுடில்லி, மார்ச் 30- நீர் மேலாண்மையில் தேசிய அளவில் 3ஆவது இடம் பிடித்த தமிழ்நாட்டிற்கு ஒன்றிய நீர் சக்தி துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய நீர் விருது வழங்கப்பட்டது.

ஒன்றிய நீர்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறை யின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருது களும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு டில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஒன்றிய நீர்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் விருதுகளை வழங்கினர். 

இதில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், ராஜஸ் தான் மாநிலத்திற்கு இரண்டாவது இடத்திற்கான விருதும், தமிழ்நாட்டிற்கு 3ஆவது இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டிற்கான விருதை நீர் வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, மற்றும் நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.இராமமூர்த்தி ஆகி யோர் ஒன்றிய நீர்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திடம் விருதைப் பெற்றுக் கொண்டனர்.


No comments:

Post a Comment