சென்னை, பிப்.15 ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவி உயர்வு கலந் தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2021-- -2022-ஆம் கல்வியாண்டுக் கான ஆசிரியர்களுக்கு பொது மாறுதல், பதவி உயர்வு களுக்கான திருத்திய கால அட்ட வணை கடந்த 28.1.2022 தேதியன்று வெளியிடப் பட்டது. தற்போது நிர்வாக காரணங் களுக்காக பள்ளிக் கல்வி ஆணை யத்தின் கட்டுப்பாட்டில் பணிபுரியும் அரசு, நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து வகை ஆசிரியர் களுக்கு 15-ஆம் தேதி (இன்று) முதல் நடக்கவிருந்த பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். அதேபோல், இடைநிலை ஆசிரி யர்கள் பொது மாறுதல் கலந் தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரி யர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறு தல் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு 15ஆம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment