காந்தியாரின் பேரன் கூறுகிறார்: வெறுப்பு, பிரிவினை, சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 1, 2022

காந்தியாரின் பேரன் கூறுகிறார்: வெறுப்பு, பிரிவினை, சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுவோம்!

மும்பை, பிப். 1- மகாராட்டிரா மாநிலத் தில், ஜெஇஎஸ் கல்லூரியின்காந்தி வாசிப்பு வட்டம்நடத்தியகர் கி தேக்கோ’ (‘செய்து பார்’) என்ற தலைப் பிலான இணையவழி கருத்தரங்கில் காந்தியாரின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

நாட்டு விடுதலையின் 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில்ஆசாதி கா அமிர்த மஹோத்சவத்தைக் அரசு கொண்டாடுகிறது. ஆனால் இந் திய வரலாற்றின் அமிர்தம் இன்று நஞ்சாகிவிட்டது. வெறுப்பு மிகுந்து, வெறுப்பே பிரச்சாரம் செய் யப்படுகிறது. காந்தியாரின் படிப்பினைகள் மங்கி வரு கின்றன. மாறாக, அவரைக் கொலை செய்த, நாதுராம் கோட் சேவின் சித் தாந்தம் மேலோங்கியுள்ளது. தேசத்தின் ஒரு சாரார் வரலாற்றை  சிதைக்கின்றனர். அதை அவர்களின் தேவைக்கேற்ப மாற்றி எழுதுகின்றனர்.

அதனால் நாம் நமது உண்மையான வரலாற்றை மீட்டெடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம். வெறுப்புக் கும், பிரிவினைவாதத்துக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டியுள்ளோம். நாம் இப் போது வன்முறை, வெறுப்பு, பிரிவினை வாதத்தின் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மதம், ஜாதி, மண்டல அடிப்படையில் பிரிந்து கொண்டிருக்கிறோம். தேசம் என்பது வெறும் எல்லைகளால், கொடியால், அல்லது ஒரு வரைபடத்தால் ஆனது அல்ல. ஒரு தேசம் என்பது மனிதர்கள் வாழும் இடம். காந்தியார் அன்று, தண்டி யாத்திரையைத் தொடங்கிய போது பலரும் புருவங்களை உயர்த்தினர். இது கட்சிக்கு சங்கடத்தை உருவாக்கும் என்றனர். ஆனால் அனைவருக்கும் காந்தியார் ஒரே பதிலைச் சொன்னார். ‘செய்து பாருங்கள்என்றார். அவர் தண்டி யாத்திரையில் வெற்றி கண்டார். இன்றும் நாம், ‘செய்து பார்க்கவேண்டிய சூழலில் உள்ளோம். நாம் வெறுப்பு, பிரிவினை, சமத்துவமின்மைக்கு எதி ராக நாம் முடிந்ததை செய்து பார்ப்போம். காந்தியின் கொள்கையைப் பின் பற்று வதே நாம் அவருக்குச் செய்யும் நன்றி.

இவ்வாறு துஷார் காந்தி கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment