கல்விக்கு வந்த கரோனா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 11, 2022

கல்விக்கு வந்த கரோனா!

கொல்கத்தா, பிப்.11 கரோனா தொற்று நோயால் குழந்தைகளின் வாசிப்புத் திறனும், எண்ணும் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.

மேற்கு வங்காளத்தில் பிரதம் கல்வி அறக்கட்டளை மற்றும் கல்லீரல் அறக்கட்டளையும் இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை மேற்கு வங்காளத்தில் நடத்தி உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மேற்கு வங்காளத்தின் 17 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 189 குழந்தைகள் இந்த கருத்துக்கணிப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் முடிவில் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவை வருமாறு:-

* 3ஆம் வகுப்பில் 2ஆம் வகுப்பு பாடங்களை 2014-இல் 32.9 சதவீதத்தினரும், 2018இல் 36.6 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்த நிலையில் தற்போது கரோனா தொற்று காலத்தில் இது 27.7 சதவீதமாக குறைந்துள்ளது.

* 5ஆம் வகுப்பில் உள்ள மாணவர்களில் 2ஆம் வகுப்பு பாடங்களை 2014இல் 51.8 சதவீதத்தினரும், 2018-இல் 50.5 சதவீதத்தினரும் வாசிக்க முடிந்தது. தற்போது இது 48 சதவீதமாக குறைந்துள்ளது.

* 2ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் வார்த்தைகளை வாசிக்கிற திறன் 2014இல் 54.8 சதவீதமாகவும், 2018இல் 66.2 சதவீதமாகவும் இருந்தது. தற்போது 53 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த முடிவுகளை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் விநாயக், இணையவெளியில் வெளியிட்டார். மாணவர்களின் வாசிப்பு திறன், எண்ணுகிற திறன் குறைந்திருப்பது குறித்து இவர் கருத்து தெரிவிக்கையில், ஊரடங்கு பொதுமுடக்கம், மாணவர்களின் அடிப்படை கல்வி கற்றலுக்கு இடையூறாக உள்ளது. தற்போது கரோனா நிலைமை மேம்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கூடிய விரைவில் திறக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஆண்டுகளில்

4,844 வெளிநாட்டவர்களுக்கு

இந்தியக் குடியுரிமை

புதுடில்லி, பிப்.11 கடந்த அய்ந்தாண்டுகளில் ஒன்றிய அரசால் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்ட மொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை குறித்து, அதை எடுத்துக்கொள்வதற்கான காரணங்களின் விளக்கம் குறித்து மக்களவையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராயிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் குடியுரிமைச் சட்டம் 1955ன் கீழ் கடந்த அய்ந்தாண்டுகளில் 4,844 வெளிநாட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் தகுதியான வெளிநாட்டினருக்கு குடியுரிமை பிரிவு 5 இன் கீழ் பதிவு செய்வதன் மூலம், பிரிவு 6 இன் கீழ் நடுநிலைப்படுத்துதல் அல்லது குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 7 இன் கீழ் பிரதேசத்தை இணைப்பதன் மூலம் வழங்கப்படுகிறது என ஒன்றிய அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

2021இல் 1,773 வெளிநாட்டவர்களுக்கும், 2020ல் 639 பேருக்கும், 2019இல் 987 பேருக்கும், 2018இல் 628 பேருக்கும், 2017இல் 817 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்

No comments:

Post a Comment