சென்னை புத்தகக் காட்சியில் பகுத்தறிவு புத்தகங்களுக்கு வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

சென்னை புத்தகக் காட்சியில் பகுத்தறிவு புத்தகங்களுக்கு வரவேற்பு

சென்னை, பிப். 28- சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத் தில் 16.2.2022 அன்று தொடங்கி 6.3.2022 வரை நடைபெறுகிறது 45ஆவது சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது.

தந்தைபெரியார் பேசிய பேச்சுகள், எழுதிய கட்டு ரைகள் ஆகியவற்றின் தொகுப் புகள் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களாக மலிவுப்பதிப் பாக வெளியிடப்பட்டு வருகி றது.

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் அரங் கான F-38 புத்தகக் கடையில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக குழுமி, அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தந்தைபெரியார் முழு உருவச் சிலை முன்பாக நின்று குழுப் படங்கள் எடுத்து மகிழ்கின்ற னர். மேலும், பெண்ணுரிமைக் கான தந்தைபெரியார் கருத்து கள் அடங்கிய  "பெண் ஏன் அடிமை ஆனாள்?" புத்தகம் அதிக வரவேற்பைப் பெற்று உள்ளது.  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் ஆய்வு நூல், வாழ்வியல் சிந்தனைகள், பெரியாரியல்  தொகுதிகள், பெரியார் களஞ்சியம் தொகு திகள், குடிஅரசு இதழ் தொகுப் புகள், தந்தைபெரியார் ஆற்றிய பணிகள் குறித்த தமிழ் மற்றும் ஆங்கில தொகுப்பு நூல்கள்,  "அர்த்தமற்ற இந்துமதம்", "ஆரியமாயை", "Untouchable" உள்ளிட்ட புத்தகங்கள் அதிக மாக விற்பனை ஆனது.

பொறியாளர் நிரஞ்சன் கூறுகையில், பெரியார், அம் பேத்கர் புத்தகங்கள் அதிகளவு விற்பனையாவது நம்பிக்கை யைத் தருகிறது. என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிக ளுக்கு தேவையான வசதிகளை "பப்பாசி" அமைப்பு செய்து கொடுத்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்றார்.

ஓவியப் போட்டி

- பபாசி

சென்னை நந்தனம் ஒய். எம்.சி. மைதானத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் 45 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் நேற்று காலை ஓவியப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து  திரளான மாணவர்கள் பங்கேற்றார்கள்.

போட்டியில் பங்கேற்று மாணவர்களால் வரையப் பட்ட ஓவியங்களில் இருந்து  தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஓவியங்களுக்கு புத்தகக்காட் சியின் நிறைவு நாளில் நீதியரசர் ஆர். மகாதேவன் அவர்கள் பரிசு வழங்கிப் பாராட்டுகிறார்.

பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

ஓவியப் போட்டி பபாசியின் தலைவர் எஸ். வயிரவன், துணைத் தலைவர் பெ. மயிலவேலன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.

 

No comments:

Post a Comment