புதுடில்லி, பிப்.15 உத்தர கண்டில் 62.5 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ள தாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள் ளது. 70- தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகு திகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் நேற்று (14.2.2022) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், 403 -தொகுதி களை கொண்ட உத்தர பிரதேச சட்டசபைக்கு 55 தொகு திகளில் மட்டும் நேற்று 2-ஆம் கட்ட தேர் தல் நடைபெற்றது .
உத்தரப்பிரதேசம், கோவாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங் கியது. அதேவேளை, உத் தரகாண்டில் வாக் குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக் குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவு அமைதி யான முறையில் நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. உத்தர கண்டில் 62.5 சத விகிதம் வாக்குகள் பதி வாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதே போன்று கோவாவில் 78.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதா கவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment