நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஊரக திறனாய்வு தேர்வு தள்ளி வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஊரக திறனாய்வு தேர்வு தள்ளி வைப்பு

பிப்.27இல் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை, ஜன.31 கிராமப்புற மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு பிப்.27-க்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத் தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட் டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000வீதம் தொடர்ந்து 4 ஆண்டுகள் கல்வி உதவித்தெகை வழங்கப் படும்.

ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதன்படி நடப்பாண்டுக் கான ஊரக திறனாய்வுத் தேர்வு பிப்.20ஆம் தேதி நடத்தப்படவிருந்த நிலையில் இத்தேர்வு பிப்.27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக்கல்வி அதி காரிகளுக்கு (சென்னை, புதுச்சேரி நீங்கலாக) அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

உள்ளாட்சித் தேர்தலை முன் னிட்டு ஊரகத் திறனாய்வு தேர்வுபிப். 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இந்த தகவலை தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வாயிலாக தெரிவிக்க முதன்மைக்கல்வி அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களை  இணைய தளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஊரகத் திறனாய்வு தேர்வு 2ஆம் முறையாக தள்ளிவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment