புதுடில்லி, ஜன.30 கிராமங்களில் அலைபேசி சேவையை அதிகரிக் கவும், அதிவேக இணையவசதிகளை அளிக்கவும் புதிதாக தமிழ்நாடு தொலைத் தொடர்பு மற்றும் உட் கட்டமைப்பு கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது.
கிராமங்களில் இணைதள வசதி யை அளிக்கும் வகையில் பாரத்நெட், தமிழ்நெட் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், கிராமங்களில் தடையில்லா அலைபேசி சேவையை அதிகரிக்கும் வகையிலும், அதிவேக இணையதள வசதியை அளிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த செலவில் உயர்தர தொலைத் தொடர்பு மற்றும் இணைய வசதிகளை அளிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கையை உருவாக்கியுள்ளது. இதற்கான அர சாணையை தகவல் தொடர்புத்துறை செயலர் நீரஜ் மிட்டல் 28.1.2022 அன்று வெளியிட்டுள்ளார்.
இந்த கொள்கையில், தொலைத் தொடர்பு வசதி தொடர்பான பல்வேறு கட்டணங்கள், விண்ணப் பம் மற்றும் அனுமதி அளிக்கும் முறை, குறைதீர்க்கும் வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, வலுவான மற்றும் பாதுகாப்பான அதிநவீன தொலைத் தொடர்பு வலையமைப்பை உரு வாக்கும் நோக்கில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்ற தொலைத் தொடர்பு தளங்களை ஏற்பது இந்த கொள்கையின் நோக்கமாகும். எனப்படும் ரைட் ஆப் வே அனுமதி வழங்குவதற்கு புதிய கட்டணங்களை அரசு அறிவித்துள்ளது.
தரைக்கு கீழ் தொலைத் தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்க அனுமதி கோரும் விண்ணப்பத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1,000 என்ற திரும்பப் பெற முடியாத கட்டணம் அல்லது அதன் ஒரு பகுதியை வரியாக செலுத்தவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல, கைபேசிக்கான கோபுரங்கள் நிறுவுவதற்கான விண் ணப்பத்துக்கு, ஒருமுறை திரும்பப் பெறாத கட்டணமாக ஒரு கோபுரத் துக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்ற தொலைத் தொடர்பு தளங்களை ஏற்பது இந்த கொள்கையின் நோக்க மாகும்.
No comments:
Post a Comment