சென்னை, ஜன.25 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (24.1.2022) வெளியிட்டார். இந்த படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவல கத்தில், மருத்துவ, பல் மருத்துவக் கல்வி போன்ற இளநிலை மருத்துவ படிப்பு களுக்கான தரவரிசை பட்டியலை நேற்று அவர் வெளியிட்டார். மேலும் அவர், அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு பிரிவில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் பெயர் பட்டியலையும், முதல் 10 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பெயர்களையும் வெளியிட்டார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2021- - 2022ஆம் ஆண்டு மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான தர வரிசை பட்டியல் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரி களுக்கான மொத்த இடங்கள் 7,825. அதில் மாநில அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு 6 ஆயிரத்து 999. அரசு பல் மருத்துவம் மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் 1,960. இதில் மாநில அரசு மற்றும் சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு 1,930 ஆகும்.
அரசு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க் கைக்கு (பொதுப்பிரிவு) மொத்தம் 25 ஆயிரத்து 595 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இதில் 16 ஆயிரத்து 74 மாணவர்கள், 8 ஆயிரத்து 875 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 949 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டன.
இதில் 16 ஆயிரத்து 29 மாணவர்கள் மாநில அரசின் பாடத் திட்டத்திலும், 8 ஆயிரத்து 543 மாணவர்கள் ஒன்றிய அரசின் கல்வி திட்டத்தின் (சி.பி.எஸ்.இ.) மூலமாகவும் படித்தவர்கள்.
சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 15 ஆயிரத்து 259 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் 14 ஆயிரத்து 913 விண்ணப் பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இதில் மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 586 பேரும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரத்து 106 பேரும் படித்தவர்கள்.
கலந்தாய்வு
மருத்துவ படிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வருகிற 27ஆம்
தேதியும் (நாளை மறுதினம்), 28, 29ஆம் தேதிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடை பெற உள்ளது.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 30ஆம் தேதி முதல் இணைய வழி மூலம் தொடங்கி நடைபெற உள்ளது.
இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி என்பது குறித்து மாணவ- மாணவிகளின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய காட்சிப் பதிவு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இது விரைவில் வெளியிடப்படும்.
இந்த வழிகாட்டு நெறிமுறை களை படித்து மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment