மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 31, 2022

மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம்

இம்பால்,ஜன.31- நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கி உள்ளது.

மியான்மர் எல்லையில் உள்ளது மணிப்பூர் மாநிலம். மலைகள் நிறைந்த இந்த மாநிலத் துக்கு கடந்த 6ஆம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அசாம் மாநிலம் சில்சர் நகரிலிருந்து மணிப்பூரின் பொங்கைசுங்பாவ் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப் படுகிறது.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் தமங் ளாங் மாவட்டம் ரானி கைடின்லியு ரயில் நிலையத்துக்கு முதல் முறையாக 27ஆம் தேதி சரக்கு ரயில் சென்றடைந்தது. அப்போது உள்ளூர் மக்கள் பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஜிரிபம் முதல்இம்பால் வரையிலான

111 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக் கும் பணி நடைபெறுகிறது. ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் அமையும் இந்த ரயில் வழித்தடத்தில் 46 சுரங்கப்பாதைகள், 153 மேம்பாலங்கள் அமைகின்றன.

இந்த வழித்தடத்தில் உலகின் மிக உயரமான (141 மீட்டர்) ரயில்வே மேம்பாலம் நோனே மாவட்டத்தில் அமைகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் ஒரு பகுதியான ரானி கைடின்லியு ரயில் நிலையத்துக்குதான் சரக்கு ரயில் சென்றடைந்தது.

No comments:

Post a Comment