கோவை தெ.புண்ணியமூர்த்தி படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 31, 2021

கோவை தெ.புண்ணியமூர்த்தி படத்திறப்பு

கோவை, டிச. 31- 26.12.2021 அன்று காலை 11 மணிக்கு முத்துநகர் தெ.புண்ணிமூர்த்தியின் படத்திறப்பு அவரது இல்லத்தில் மாவட்ட தலைவர் .சந்திர சேகர் தலைமையில் நடைபெற்றது.

அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம் ,மாவட்ட செயலாளர் திக செந்தில் நாதன், மண்டல செயலாளர் .சிற்றரசு, மண்டல மகளிரணி செயலாளர்ப.கலைச் செல்வி, மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வம் ஆகியோர் முன் னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச் சியில் தெ.புண்ணியமூர்த்தி அவர் களின் படத்தை திறந்து வைத்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன்  உரையில் அவரின் கொள்கை பற்றை எடுத்து கூறினார். 

அப்போது கூறியதாவது, தோழர் புண்ணிய மூர்த்தி மறை யவில்லை, நம்மோடு கொள்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தந்தை பெரியார் சொல்கிறார் நான் எந்த இடத்திலும் கட்சிக் காரனாக நடந்து கொண்டதில்லை, கொள்கைகாரானாக மட்டுமே நடந்து இருக்கிறேன்.  எனக்கு வெற்று கூச்சல் போட கூடிய ஆயிரம் பேர் இருப்பதைவிட துப்பாக்கி குண் டுக்கு மார்பை காட்டுகிற நூறு பேர் போதும் எனது கொள்கை வென்றெடுக்க முடியும் என்கிறார்.

அந்த நூறு பேர் வரிசையில் முதல் இடத்தில் இருக்கக்கூடியவர் மறைந்த நமது புண்ணியமூர்த்தி தோழர் ஆவார். இறப்பு குறித்து தந்தை பெரியார் சொல்லும் போது இயற்கையின் கோணல் புத்தி என்பார். இருதய நோய்க்கு பல காரணங்கள் இருந்தாலும், மன அழுத்தமே இருதய நோய்க்கு முக்கிய காரணம் ஆகும் ஆகவே கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வீரவணக்கம் செலுத்தி உரையாற்றினார்.

தொடர்ந்து கழக சொற்பொழி வாளர் புலியகுளம் வீரமணி உரையாற்றினார். நிகழ்வில் ஏராள மான கழகத் தோழர்கள் மற்றும், புண்ணியமூர்த்தி அவர்களின் நண் பர்கள், குடும்ப உறவுகள் ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

"புண்ணியமூர்த்தி நினைவு அறக்கட்டளை"

தலைமை கழக சொற்பொழிவா ளர் தஞ்சை இரா பெரியார் செல் வத்திடம் அவர்களிடம் வறுமை யில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி "புண்ணியமூர்த்தி நினைவு அறக் கட்டளை" தொடங்க நிதி வழங் கினார். மாநில அமைப்பு செயலா ளர் ஈரோடு .சண்முகம் ரூ.5000, திருப்பூர் குமரவேல் ரூ.5000, வே. ஈஸ்வரன் ரூ.2000, சிவசுப்பிரமணி யம் ரூ.1000, எல் ஜி யில் பணிபுரியும் தோழியர் ரூ.1000, மொத்தம் 14000 ஆயிரம் நிதியை வழங்கினார் .

மரபுகளை உடைத்த மகளிர்

மறைந்த புண்ணியமூர்த்தியின் உடலை மகளிரே சுமந்து வந்தனர். இறுதி மரியாதை செலுத்தி பிறகு புண்ணியமூர்த்தி அவர்களின் இறுதி பயணத்தில் இல்லத்தில் இருந்து பெண்களே முன் வந்து மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி தலைமையில் தூக்கிக்கொண்டு வந்தனர் ராஜேஷ் வரி, தனலட்சுமி, முத்துமணி,கவிதா, தேவிகா, புனிதா, இனியா,கயல்விழி, எழிலரசி, ..யாழினி, வெ.யாழினி, வெ.இளமதி, கவுசல்யா,மகளிரணியினரே புண்ணியமூர்த்தி உடலுக்கு வீரவணக்கம் செலுத்தி சுமந்து வந்தனர்.அப்போது கழகத் தோழர் கள் வீரவணக்கம் முழக்கம் எழுப்பி உணர்ச்சி பூர்வமான கொள்கை முழக்கத்துடன் ஊர்வலம் தொடங் கியது தொடர்ந்து வாகனத்தில் முன்பு கழக தோழர்கள் இருசக்கர வாகனத்தில் கழக கொடி பிடித்து இருபுறமும் அணிவகுத்து மின் மயானம் வரை ஜாதி ஒழிப்பு வீரருக்கு வீரவணக்கம், பெரியார் தொண்டர் புண்ணியமூர்த்திக்கு வீரவணக்கம், மத மறுப்பு போரா ளிக்கு வீரவணக்கம், கடவுள் மறுப்பு போராளிக்கு வீரவணக்கம், தந்தை பெரியார் தொண்டருக்கு வீரவணக்கம் என்று ஊர்வலம் தொடங்கியதில் இருந்து மின் மயானம் வரையிலும் கொள்கை முழக்கம் எழுப்பி வீரவணக்கம் செலுத்தினார்.

No comments:

Post a Comment