மகா கெட்டவர் கடவுள்!
* ஆயுத பூஜை நல்ல நேரங்கள்:
14.10.2021 - வியாழன்கிழமை காலை 9 மணிமுதல் 10.30 மணிவரை; மதியம் 12 மணிமுதல் 1.30 மணிவரை; மாலை 4.30 மணிமுதல் 6 மணிவரை; இரவு 6 மணிமுதல் 7 மணிவரை.
- ஸ்ரீ சிவானந்த ஜோதிட நிலையம்
* கடவுளுக்குரிய பூஜை நாளில் கூட நல்ல நேரம், கெட்ட நேரமா?
‘நல்ல' கடவுள்- ‘நல்ல' மதம் - ‘நல்ல' பூஜை!
வாயால் சிரிக்க முடியவில்லையே, என்ன செய்வது!
காசேதான் கடவுளப்பா!
* ஆந்திர மாநிலம் நெல்லூர் கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் ரூ.5 கோடி பணத்தைப் பயன்படுத்தி அம்மனையும், கோவிலையும் அலங்கரித்தனர்.
>> கொட்டிக் கொடுக்கப் பக்தர்கள் இருக்கும்பொழுது பணத்துக்கா பஞ்சம்?
‘அருள்வாக்கோ!'
* தி.மு.க.வின் தற்காலிக வெற்றி ஜனநாயகத்தின் தற்காலிக தோல்வி.
- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
>> சொல்லுவது தற்காலிக பா.ஜ.க. தலைவர் என்று சொல்லலாமோ!
இதுதான் சங் பரிவார்!
* மத்திய பிரதேசம் பள்ளி ஒன்றில் ‘பாரத் மாதா கீ ஜே!' சொல்லாத ஆசிரியர், மாணவருக்கு அடி!
>> வீதிகளில் திரிந்த ‘‘வெறி'' இப்பொழுது பள்ளிகளுக்குள்ளும் புகுந்து குரைப்பதா?
No comments:
Post a Comment