மருந்துப் பொருள்கள் உற்பத்திகான முதலீடுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 31, 2021

மருந்துப் பொருள்கள் உற்பத்திகான முதலீடுகள்

சென்னை, அக். 31- அய்.டி. அய். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது அடுத்த மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்பாக, அய்.டி.அய். ஃபார்மா மற்றும் ஹெல்த் கேர்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஆரம்ப முதலீட்டு காலம், 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 1-ஆம் தேதியுடன் முடிகிறது. இதில், குறைந்தபட்சமாக 5 ஆயிரம் ரூபாயும், அதன் பின்னர் 1 ரூபாயின் மடங் குகளாக முதலீட்டாள ரின்விருப்பத்தைப் பொறுத்து எவ்வளவு தொகை வேண்டுமானா லும் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுத் திட் டத்தை  பிரதீப் கோகலே மற்றும் ரோஹன் கோர்டே ஆகியோர் நிர்வகிக்கின் றனர்.

இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் தொகை முழுமையாக, மருந்துப் பொருள் உற்பத்தி நிறு வனங்கள் மற்றும் சுகாதா ரப் பணி சார்ந்த நிறுவ னங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய் யப்படும். தேசிய பங்குச் சந்தையில் தற்போது விற் பனையாகும் சுகாதாரப் பணி சார்ந்த நிறுவனங் களில் இருந்து தேர்ந் தெடுத்த முன்னணி 50 நிறுவனங்களின் ஒட்டு மொத்த சராசரி வளர்ச் சியை, இந்த புதிய திட்ட யூனிட்களின் வளர்ச் சியை ஆய்வு செய்ய ஒப் பீட்டுக்கு எடுத்துக் கொள் வது எனவும் முடிவு செய் யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய மியூச் சுவல் ஃபண்ட் முதலீட் டுத் திட்டத்தின் ஆரம்ப முதலீட்டு வாய்ப்பு தொடங்கியிருப்பது குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட அய்.டி.அய். மியூச்சுவல் ஃபண்ட் முதன்மை முதலீட்டு நிர்வாகியுமான ஜார்ஜ் ஹெபர் ஜோசஃப், “ஒட்டுமொத்த உலகை யும் உலுக்கி எடுத்த கோவிட் 19 பெருந்தொற்று, இந்திய மருந்துப் பொருள் உற்பத்தி நிறுவனங்க ளுக்கு ஒரு புதிய உத் வேகத்தை வழங்கியுள் ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment