வேலூரில் நாளை நூல் வெளியீட்டுவிழா மற்றும் "நீட்" தேர்வு ஏன்? எதற்காக? கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

வேலூரில் நாளை நூல் வெளியீட்டுவிழா மற்றும் "நீட்" தேர்வு ஏன்? எதற்காக? கருத்தரங்கம்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

வேலூர், அக்.16 வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 08.10.2021 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிய ளவில் வேலூர் சுயமரியாதை சுடரொளி பழனியப்பன் நினைவரங்கத்தில் நடை பெற்றது. வேலூர் மாவட்ட தலைவர் வி. . சிவக்குமார் தலைமை வகித்தார், வேலூர் மாநகர தலைவர் .விஸ்வநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாநில அமைப்பாளர் மானமிகு உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன், வேலூர் மண்டல தலைவர்  வி.சடகோபன், பெரியார் மருத்துவரணி செயலாளர்  மரு பழ.ஜெகன்பாபு, மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரப்பாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப் பட்டனர்.

நாளை 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் "நீட் தேர்வு ஏன்? எதற்காக?" கருத்தரங்கம் நிகழ்விற்கு வருகை தருவதையொட்டி சிறப்பாக இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது. "கற்போம் பெரியாரியம்" மற்றும் "ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை" நூல்கள் குறித்து கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் அறிமுக உரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை முனைவர், நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன் அவர்கள் நூல் வெளியிட்டு உரை நிகழ்த்த உள்ளார், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் .பி.நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் .கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் நீல.சந்திரகுமார் ஆகியோர் நூலினை பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சி தோழர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

1. இரங்கல் தீர்மானம் : வேலூர் மாவட்ட அமைப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் .கி. செல்வநாதன், பெரியார் சுயமரியாதை பிரச்சார துணைத் தலைவர் இராசகிரி கோ. தங்கராசு , வேலூர் மாவட்ட செயலாளர் கு. இளங்கோவன் அவர்களின் வாழ் விணையர் .சகுந்தலா ஆகியோர்களின் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

2. 17.10.2021 கருத்தரங்கம், நூல் அறி முக விழாவிற்காக வேலூர் மாநகருக்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் வருகைக்கு வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மகிழ்ச்சி தெரிவிக்கப் பட்டது.

3. வேலூர் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வேலூர் வள்ளலார் பகுதியிலிருந்து சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப் பட்டது.

புதிய பொறுப்பாளர்கள்

4. புதிய பொறுப்பாளர்கள் :  .ஈஸ்வரி - வேலூர் மண்டல மகளிரணி செயலாளர்,

.கலைமணி- மாவட்ட மகளிரணி தலைவர்

. இரம்யா- மாவட்ட மகளிரணி செயலாளர், .கலைவாணி- மாவட்ட மகளிரணி அமைப் பாளர், சி.லதா - மாவட்ட மகளிர் பாசறை தலைவர், சு.வசுமதி - மாவட்ட மகளிர் பாசறை செயலாளர், தி. அனிதா- மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர்,  . கயல்விழி - மாநகர மகளிரணி தலைவர், வீ.பொன் மொழி - மாநகர மகளிரணி தலைவர், . தெய்வயானை - மாநகர மகளிர் பாசறை அமைப்பாளர், . இராஜகுமாரி - குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர், இர. உஷாநந்தினி - குடியாத்தம் நகர மகளிர் பாசறை செயலாளர், .சசி - மாவட்ட மாணவர் கழக

தலைவர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், வேலூர் மண்டல மகளிரணி செயலாளர் .ஈஸ்வரி, மாவட்ட . தலைவர் இர. அன்பரசன், மாவட்ட மகளிரணி தலைவர் .கலைமணி, வேலூர் மாநகர தலைவர் .விசுவநாதன், பொதுக்குழு உறுப்பினர் . சிகாமணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் சி.லதா, வேலூர் மண்டல மாணவர் கழக செயலாளர் .வெங்கடேசன், மாநகர .. செயலாளர் நெ.கி. சுப்பிரமணி, மாவட்ட இளை ஞரணி தலைவர் பொ.தயாளன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் தி. அனிதா, மாநகர . செயலாளர் .மோ.வீரமணி, மாநகர மகளிரணி தலைவர் .கயல்விழி, குடியாத்தம் நகர தலைவர் சி.சாந்தகுமார் குடியாத்தம் நகர அமைப்பாளர் வி. மோகன், பகுத்தறிவாளர் கழகம் கே.பரமசிவம், குடியாத்தம் நகர மகளிர் பாசறை தலைவர் ஆர். ராஜகுமாரி, மாவட்ட மாணவரணி தலைவர் வி.சி. தமிழ் நேசன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் .சசி, மாநகர மாணவர் கழக தலைவர், .ரேகா, மாவட்ட மாணவர் கழக செயலாளர் .ஜெ. ஓவியா, மாணவர் கழக வி.சி.சங்கநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment