உரத்தநாடு, அக்.2 சுயமரியாதைச் சுடரொளிகள் இ.கைலாசமுத்து, அ.இராமச்சந்திரன், இராசம்மாள், போ.கு.ரெங்கசாமி, ரெ.பாப்பம் மாள், தூ.நீலமேகம் ஆகியோரின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் 26.9.2021 அன்று மாலை 6.30 மணிக்கு உரத்தநாடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் வரவேற்று உரையாற்றினார்.
ஒன்றிய கழகத் தலைவர் த.செகநாதன் தலைமை வகித்தார்.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடக்க வுரையாற்றினார். மண்டல தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒன்றிய செயலாளர் ஆ.இலக்குமாறன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லிப்பட்டு அ.இராமலிங்கம், பெரியார் பிஞ்சு, மோகன் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தி னார்கள்.
நிறைவாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுயமரியாதைச் சுடரொளி களின் தொண்டுகள், பெரியார் பெருந்தொண்டர்களின் சிறப்பு களை விளக்கியும், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் ஆகி யோரின் அரும்பணிகளை விளக்கி யும் பெரியார் உலகத்தில் நாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டியன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராம கிருட்டிணன், மண்டல இளை ஞரணி செயலாளர் பேர.இராச வேலு, மாவட்ட கலைத்துறை தலை வர் வெ.நாராயணசாமி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த் தன், ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரமசிவம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் வ.அல்லிராணி, நகர இளைஞரணி தலைவர், செயலாளர் பேபி.ரெ.இரமேசு உள்ளிட்ட ஏரா ளமான தோழர்கள் பங்கேற்றனர். நகரத் தலைவர் பேபி.ரெ.இராமச் சந்திரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment