தஞ்சையில் "நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்? எதற்காக?' கருத்தரங்கம் மற்றும் "கற்போம் பெரியாரியம்', "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை' நூல் வெளியீட்டு விழா (2.10.2021)
தஞ்சாவூர், அக். 3- 2.10.2021 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் குழந்தை இயேசு திருமண மண்டபத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் "நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்-ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் “கற்போம் பெரியாரியம்", மற் றும் "ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன்" குதிரை” ஆகிய நூல்கள் அறிமுக விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை ஏற்று உரையாற்றினார். கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், கழக காப்பாளர் ஜெயராமன், கழக மண்டல தலைவர் அய்யனார், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மன்னார்குடி மாவட்ட செயலாளர் கணேசன், ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு “நீட்தேர்வு ஒழிக்கப்பட வேண் டும் ஏன் - எதற்காக?” என்ற தலைப்பில் சிறப்பு ரையாற்றினார்.
“கற்போம் பெரியாரியம்“ எனும் நூலை அறிமுகப்படுத்தி கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பேராசிரியர் முனைவர் ந.எழிலரசன், ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை என்ற நூலை அறிமுகப்படுத்தி கழக பொதுச் செயலா ளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர். இவ்விரு நூல்களையும் திரா விட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் அமைச் சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா வெளியிட்டு உரை யாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், தஞ்சை மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினர்,
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் ம.தி.மு.க. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், கம்யூனிஸ்ட் சிபிஅய் மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், சிபிஅய் மாநில தொழிற்சங்க செயலாளர் சந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா ளர் சொக்காரவி, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் அய்.எம் பாதுஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செய லாளர் எஸ்.எம்.ஜெயினுலாவுதீன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் திமுக இறைவன், தஞ்சை முதல்நிலை ஒப்பந்தகாரர் பொறியாளர் ரவிச் சந்திரன், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் அழகிரிசாமி, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநில வீர விளையாட்டு கழக செயலாளர் ராமகிருஷ்ணன், மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மண்டல இளைஞரணி செயலாளர் ராஜவேல், மாவட்ட இணை செயலாளர் தீ.வா.ஞானசிகா மணி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்டாலின், மாவட்ட துணை செயலாளர் சந்துரு, கழக பேச்சாளர்கள் பெரியார் செல்வன், பூவை புலி கேசி, இராம.அன்பழகன், தஞ்சை தெற்கு ஒன் றிய தலைவர் இரா,சேகர், ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு ராமலிங்கம், திருவையாறு ஒன் றிய தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஒரத்தநாடு, ஒன்றிய தலைவர் ஜெக நாதன், செயலாளர் லட்சுமணன், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர், செ.காத்தையண், பூதலூர் ஒன்றிய தலைவர் இரா.பாலு, ஒன்றிய செயலாளர் புகழேந்தி, மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் இரா.சரவணகுமார், மாவட்ட இளை ஞரணி செயலாளர் வெங்கடேசன் மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் மானவீரன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் விஜய குமார், மாவட்ட தொழிலாளர் அணி அமைப் பாளர் ஏகாம்பரம், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அழகிரிசாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் நான் சங்கர், தஞ்சை நகர அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவர் கழகத் துணை தலைவர் கபிலன் மற்றும் கழக பொறுப்பாளர்கள் அனைத் துக் கட்சி தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு நூல்களைப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக தஞ்சை மாநகர தலைவர் நரேந்திரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment