இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் இணையும் 3ஆவது நிறுவனம் - ஒன்றிய அரசு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 3, 2021

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் இணையும் 3ஆவது நிறுவனம் - ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, அக்.3 இந்தி யாவில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் கோவேக்சின், கோவி ஷீல்டு ஆகிய 2 தடுப் பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலை யில், 3ஆவது தடுப்பூசி யாக ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை செய லாளர் ராஜேஷ் பூஷண், டில்லியில் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறிய தாவது;-

கரோனாவுக்கு எதி ராக ஜைடஸ் கேடிலா நிறுவனம் உள்நாட்டில் உருவாக்கியுள்ள ஊசியில்லாத கரோனா தடுப் பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

 இந்த தடுப்பூசி விலை குறித்து தயாரிப்பு நிறு வனத்திடம் பேச்சு வார்த்தை நடந்து வரு கிறது.

இந்த தடுப்பூசியை 3 டோஸ் போட வேண் டும். ஊசியின்றி (மேல் தோலில் அழுத்தம் மூலம் ஊசியின்றி தடுப் பூசி செலுத்த முடியும்) செலுத்தக்கூடியது. தற் போதைய தடுப்பூசி விலையில் இருந்து இதன் விலை வேறுபட்ட தாக இருக்கும். தடுப்பூசி திட்டத்தில் இந்த தடுப் பூசி இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment