மதுரவாயல்- துறைமுகம் இடையே 2 அடுக்கில் பறக்கும் சாலை திட்டம்; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 1, 2021

மதுரவாயல்- துறைமுகம் இடையே 2 அடுக்கில் பறக்கும் சாலை திட்டம்; திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரம்

நெடுஞ்சாலை துறை செயலர் தீரஜ் குமார் தகவல்

சென்னை, அக்.1- நாட்டில் முதல் முறையாக 2 அடுக்கு சாலையாக அமையவுள்ள மதுரவாயல்- துறை முகம் பறக்கும் சாலைக்கான விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 3 மாதங்களில் நிறைவடையும். திட்ட அறிக்கை கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையில் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. ரூ.1,815 கோடி மதிப்பிலான இத் திட்டத்துக்கு 2007-இல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். 2011-இல் ஆட்சி மாற் றம் ஏற்பட்ட நிலையில், அப்போ தைய அதிமுக அரசு, திட்டம் தொடர்பாக ஆய்வு செய்தது.

கூவத்தின் நீர்வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாக கூறி இதற்கு தடை விதித்தது. கோயம்பேடு முதல் மதுர வாயல் வரை மற்றும் கூவம் ஆற்றின் ஓரத்தில் தூண்கள் அமைக் கப்பட்ட நிலையில், பணிகள் நிறுத் தப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், தமிழ்நாடு முதலமைச்சரான பழனி சாமி, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து இத்திட்டம் குறித்து பேசியபின், அதை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட் டது. இதையடுத்து, திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,815 கோடியில் இருந்து 2018-இல் ரூ,2,400 கோடியாகவும், அதன்பின் ரூ.3,087 கோடியாகவும் அதிகரிக்கப்பட்டு, திட்டத்தை மறு வடிவமைப்பு செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்க்காக சிந்தா திரிப்பேட்டை, எழும்பூர், அமைந்த கரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் 6,993 சதுர மீட்டர் தனியார் நிலம், 2,722 சதுர மீட்டர் அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டன.

இந்த சாலைக்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டலத்திலும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந் நிலையில் இத்திட்டத்தை செயல் படுத்த சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, துறைமுக பறக்கும் சாலை, நவீன தொழில்நுட்பத்துடன் இரண்டு அடுக்கு சாலையாக அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை செயலர் தீரஜ் குமார் கூறிய தாவது:

மதுரவாயல் - துறைமுகம் சாலை யின் முதல் அடுக்கில் பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் 6 வழிச்சாலை யாக அமைக்கப்படுகிறது. இதில் அணுகு சாலை அமைப்பதற்கான திட்டமிடல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் அடுக்கில் 4 வழிச் சாலையானது மதுரவாயல் முதல் துறைமுகம் வரை செல்லும். இதில் கண்டெய்னர் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் செல்லும்.

நவீன தொழில்நுட்பத்துடன், கூடுதல் எடையை தாங்கும் வகை யில் இப்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 3 மாதங் களில் முடிக்கப்படும். திட்ட அறிக்கை கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி முதலீட்டில் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment