2ஆவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78 சதவீதம் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 11, 2021

2ஆவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78 சதவீதம் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை, அக், 11- 9 மாவட்டங் களில் நடை பெற்ற 2-வது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78.47 சதவீதவாக்குகள் பதி வாகி உள்ளதாக தமிழ் நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத் தப்பட்டது. 28 மாவட்டங்க ளுக்கு மட்டும் இந்த தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், நெல்லை மாவட் டங்களை பிரித்து புதிய மாவட் டங்கள் அறிவிக்கப்பட்டதால், வார்டு வரையறை போன்ற பணிகளுக் காக தேர்தல் நடத் தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலை யில், பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், நெல்லை மாவட் டங்களுக்கும், புதிதாக உதயமான செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத் தூர்,  கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தமிழ்நாடு மாநில தேர் தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி, இந்த 9 மாவட் டங்களில் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் 2 கட்டங் களாக ஊரக உள்ளாட்சி தேர் தல் நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத மும், 2ஆவது கட்ட தேர்தலில் 78.47 சதவீதமும் வாக்குகள் பதி வாகி யுள்ளன, வாக்கு எண் ணிக்கை நாளை (12.10.2021) நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், 2ஆவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறப் பட்டுள்ளதாவது:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள் ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங் களுக்கு உள்பட்ட 35 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தல்களுக்கான இரண்டாம் கட்டவாக்குப்பதி வும், ஏனைய 28 மாவட்டங் களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நிரப்பப்படாத மற்றும் காலியாக உள்ள பதவி யிடங்களுக்கான தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதி வும் 9-.10.-2021 அன்று அமைதி யான முறையில் நடைபெற்றது.

மொத்தம் 78.47 சதவீத வாக் குகள் பதிவாகி உள்ளன, 28 மாவட்டங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் 70.51 சதவீதவாக்குகள் பதிவாகியுள் ளன. தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத் திற்கு உள்பட்ட சிவசைலம் கிராம ஊராட்சி வார்டு எண் 3-க்கு நடைபெற்ற மறு வாக் குப்பதிவில் 80.79 சதவீத வாக்கு கள் பதிவாகி உள்ளன. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment