சீனாவில் கரோனா தொற்று அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

சீனாவில் கரோனா தொற்று அதிகரிப்பால் மீண்டும் ஊரடங்கு

பிஜீங், ஆக. 2- சீனாவின் நான்ஜிங் நகரில் கண்டறி யப்பட்ட புதிய கரோனா தொற்று தலைநகர் பிஜீங் குக்கும், 5 மாகாணங்களுக் கும் பரவத் தொடங்கி உள்ளது. வுகான் நகருக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் நோய் தொற்று பரவுவதாக அரசு ஊட கங்கள் தெரிவித்துள்ளன.

நான்ஜிங் விமான நிலையத்தில் கடந்த 20 ஆம் தேதி துப்புரவு பணி யாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண் டறியப்பட்டது. அதன் பிறகு இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து நான்ஜிங் நகருக்கு வந்த விமானத்தில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர் ஒரு வருக்கு தொற்று முதல் முதலில் கண்டறியப்பட் டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நான் ஜிங் நகரில் இருந்து வரும் விமானங்கள் அனைத்து ஆகஸ்டு 11ஆம் தேதி வரை  நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்நக ரில் வசிக்கும் 90 லட்சம் பேருக்கு கரோனா பரி சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சீனா வின் புஜியான் மற்றும் சொங்கிங் நகராட்சி ஆகிய பகுதிகளிலும் கரோனா தொற்றுப் பரவி உள்ளது. அங்கு புதிதாக 55 பேருக்கு தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

சீனாவில் உருமாற்றம்  அடைந்த டெல்டா வகை வைரஸ் பரவி வரு வதாக தெரிவிக்கப்பட் டதை அடுத்து தலைநகர் பிஜீங் மற்றும் 5 மாகா ணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டு உள் ளது. அங்குள்ள மக்கள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment