தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம் மற்றும் நீக்கரவு) சட்ட முன்வடிவு அறிமுகம் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி
சென்னை,ஆக.31- சட்டமன்றத்தில் இன்று (31.8.2021) உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம் மற்றும் நீக்கரவு) சட்ட முன்வடிவை அறிமுகம் செய்து வைத்தார். அதில், கூறியிருப்பதாவது,
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கல்லூரிகளை இணைப்பதன்மூலம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தினை ஒருங்கிணைந்த வகையிலிருந்து இணைக்கப் பட்ட வகையாக மாற்றுவதற்கும் மற்றும் அதற்கிணங்கிய வகையில் கூறப்பட்ட நோக்கத்திற்காக 2013ஆம் ஆண்டு அண்ணாமலைப்பல்கலைக்கழகச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 20/2013) மற்றும் 1981ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 2/1982) தக்கவாறு திருத்தம் செய்யவும் 2021ஆம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 5/2021) நீக்கரவு செய்வதெனவும் அரசானது முடிவுசெய்துள்ளது என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. வெளிநடப்பு
2013ஆம் ஆண்டு அண்ணாமலைப்பல்கலைக்கழகச் சட்டத்தையும், 1981ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக் கழகச் சட்டத்தையும், மேலும் திருத்தம் செய்வதற்கான மற்றும் 2021ஆம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்கரவு செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் இன்று (31.8.2021) உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அறிமுகம் செய்தபோது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன் எழுந்து, இச்சட்ட முன்வடிவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று அறிவித்ததைத்தொடர்ந்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் இச்சட்ட முன்வடிவை ஆதரிக்க வில்லை எனத் தெரிவித்தார்.
தானியங்கி முறையில் பட்டா மாறுதல் அறிமுகம்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தகவல்
சென்னை, ஆக.31 சட்டமன் றத்தில் இன்று (31.8.2021) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்ப தாவது: போலியான நில ஆவணங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பத்திரப் பதிவு மோசடிகளை தடுக்கும் பொருட்டு பத்திரப்பதிவுக்கு முன்னதாகவே நிலத்தினை அளவை செய்து உட்பிரிவு களை அமைக்கும் முறையினை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி முறையில் பட்டா மாறுதல்
இதற்குரிய மென்பொருள் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இத்திட்டத்தின்கீழ் உரிய நில ஆவணங் களில், புதிய உட்பிரிவுகளை வரைவு செய்து அவற்றினை உரிமையாளர்களின் பெயரிலேயே பதிவு செய்வதற்கும் வழிவகை செய்யப்படும். அதன்பின்னர் நிலக்கிரையம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்ற உடன் தானியங்கி முறையில் பட்டா மாறுதல் நடைபெறும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் கோவிட்19 சிறப்பு நிவாரண நடவடிக்கைகள்
அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை, ஆக.31 தொழில் துறை, தமிழ் வளர்ச்சிக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (31.8.2021) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
பன்னாட்டு தொற்று நோயான கோவிட் என்னும் கரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் கோவிட் நிவாரணம் மற்றும் மேம் பாட்டுத்திட்டம் (சிளிஸிஹிஷி) எனும் புதிய திட்டத்தை 1.4.2020 அன்று அறி முகப்படுத்தியது. இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது தனது குறு,சிறு மற்றும் நடுத்தர வாடிக்கையாளர் களுக்கு 6 விழுக்காடு மானியத் துடன் ரூ.25 லட்சம் வரையிலான கடனுதவியை எவ்வித கூடுதல் பிணைச்சொத்து மற்றும் செயலாக்கக் கட்டண மின்றி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 1828 குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.218.43 கோடி அளவி லான நிதி உதவியானது இக்கழகத்தால் 31.3.2021வரை வழங்கப்பட்டுள்ளது என அதில் அவர் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment