கோவையில் செயற்கை கை, கால்களுக்காகக் காத்திருப்போர் இல்லாத அரசு மருத்துவமனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

கோவையில் செயற்கை கை, கால்களுக்காகக் காத்திருப்போர் இல்லாத அரசு மருத்துவமனை

கோவை, ஆக.2 கோவை அரசு மருத்துவ மனையில் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மய்யத்தின் முயற்சியால், தற்போது மாவட்டத்தில் செயற்கை உறுப்புகளுக்காகக் காத்திருப்போர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பில் எடை குறைந்த செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மய்யம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், 2020 ஆகஸ்ட் மாதம் நீரிழிவு நோயால் காலை இழந்த நோயாளிக்கு, முதல் செயற்கை கால் பொருத்தப்பட்டது. அதன்பிறகு, தற்போதுவரை 40 பேருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, மருத்துவமனையின் முடநீக்கியல் துறை இயக்குநர் செ.வெற்றிவேல் செழியன் கூறியதாவது:

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முடநீக்கியல் துறையில் செய்யப் பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் ஈட்டிய பணத்தில் இந்த மய்யம் தொடங்கப்பட்டது. இவ்வாறு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் மய்யம் இதுவாகும்.

இங்கு செயற்கை உறுப்புகள் அனைத்தும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்து கொடுக்கப் படுகிறது. இதுவரை கால்களை இழந்த 38 பேர், கை இழந்த 2 பேர் என, இதுவரை மொத்தம் 40 பேருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட் டுள்ளன. இதில், கை, கால் இரண்டையும் இழந்து உறுப்புகள் பொருத்தப்பட்ட இருவரும் அடங் குவர்.

கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையுடன் இணைந்து, காத்திருப்போர் பட்டியல் பெறப்பட்டு, அவர்களுக்கும் செயற்கை, கை கால்கள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 10 பேருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தப் பட்டுள்ளன. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் செயற்கை உறுப்புகளுக்காகக் காத்திருப்போரே இல்லை என்ற நிலை உருவா கிறது. இந்த நிலையை எட்டிய முதல் மாவட்டமாக கோவை உள்ளது. கோவை மாவட்டம் மட்டு மல்லாமல், சேலம், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில், கை, கால்களை இழந்தவர்களும் பயன்பெறும் வகையில் இந்த மய்யம் செயல்பட்டு வருகிறது.

கரோனா காலத்திலும் தொடர்ந்து எடை குறைந்த கை, கால்களைப் பொருத்தி, இங்கு சிகிச்சை அளித்து வந்தோம். சிகிச்சை பெறுவோ ருக்கு நடைப்பயிற்சி, உளவியல் ஆலோசனை ஆகியவை அளிக்கப்படுகின்றன''.

இவ்வாறு முடநீக்கியல் துறை இயக்குநர் வெற்றிவேல் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியது

அரசு புள்ளி விவரத்தில் தகவல்

சென்னை, ஆக.2 தமிழ்நாட்டில் மொத்த வாக னங்களின் எண்ணிகை 3 கோடியைத் தாண்டி யுள்ளது. இவற்றில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 565 என்று அரசு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளன. ஒவ் வோர் ஆண்டும் 10 முதல் 14 சதவீதம் வரை வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. கரோனா தாக்கத்தின்போது வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அரசுப் போக்குவரத்துத் துறை பதிவேடுகளின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடியே 3 லட்சத்து 31 ஆயிரத்து 969வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், கல்லூரி, பள்ளிவாகனங்கள், பல வகையான லாரிகள் என 13 லட்சத்து 10 ஆயிரத்து 317 போக் குவரத்து வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்து 31 ஆயிரத்து 565. மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் இது சுமார் 85 சதவீதமாகும்.

தமிழ்நாட்டில் 2011-இல் ஒரு கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 338 இருசக்கர வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. கரோனா பாதிப்பு காலத்தில் ரயில், பேருந்துகளில் மக்கள் பயணிப்பதை தவிர்த்தாலும், கார், இருசக்கர வாகனங்கள் போன்ற சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் சொந்த வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கரோனா அச்சத்தால் மக்கள் பொதுப் போக்குவரத்து வசதியை தவிர்த் துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் புதிய வாகனங் களின் எண்ணிக்கை 3 முதல் 6 சதவீதம் அதிகரித் துள்ளது. பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை ஒன்றிய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதுதவிர, சாலைகளை விரிவுபடுத்துதல், முக்கியமான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழைய வாகனங்கள் அழிப்பு

இதற்கிடையே, ஒன்றிய அரசு பழைய வாக னங்கள் அழிப்புக் கொள்கையை வெளியிட்டுள் ளது. அதன்படி, நாடு முழுவதும் 20 ஆண்டுகளைக் கடந்த சொந்தவாகனங்களையும், 15 ஆண்டு களைக் கடந்த போக்குவரத்து வாகனங்களையும் நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது பழையவாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம்தான், மாசு குறைபாட்டை சரிசெய்ய முடியும். உதிரி பாகங்களின் விலை குறையும். புதிய வாகனங்களின் உற்பத்தி பெருகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

No comments:

Post a Comment