தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு நாள் (2.8.2021) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நினைவு நாள் (2.8.2021)

நமது வாழ்க்கையில் ஒரு பொருள் எவ்வளவு அத்தியாவசியம் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த பொருள் இல்லாத உலகத்தை நாம் கற்பனை செய்து பார்த்தால் போதும். உதாரணத்திற்கு தொலை பேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண் டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னதக் கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்.

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் மார்ச் 3, 1847இல் ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க்கில் பிறந்தார்.

அவருடைய குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவரு டைய பெயரையும் சேர்த்து அலெக் சாண்டர் கிரகாம் பெல் என்று இவ ருக்குப் பெயர் சூட்டப்பட்டது. இவரு டைய தந்தை அலெக்சாண்டர் மெல் வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். லண்டனில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளி னில் உள்ள அவருடைய மாமா, எடின் பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் கைகள் மூலம் தகவல்களைச் சொல்லும் கலையை தொழிலாகவே கற்றுத்தந்துவந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல் வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டு வது? உதடுகளின் அசைவைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள் வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார்.

எட்டு வயதிலேயே கிரகாம் நன் றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவ ராகத் திகழ்ந்தார். பத்து வயதான போது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது. இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலை களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார். பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவரையே திருமணம் செய்துகொண்டார். கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந் தது. போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரி யர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத் தினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார். அவ ரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங் கும் பரவியதால், பாஸ்டன் பல்கலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரி யராக இவரை பணியில் அமர்த்தியது.

. 1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது. பெல் அவரு டைய உதவியாளர் வாட்சன் என்பவ ரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர்வாட்சன் இங்கே வாருங்கள். உங்க ளைக் காண வேண்டும்என்பதுதான்.

 தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ஆகஸ்ட் 2,1922இல் தனது 75வது அகவையில் அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பிரெஞ்சு அரசு வழங்கியலெஜியன் ஆப் ஆனர்' விருது, வோல்டா பரிசு,ஆல்பெர்ட் பதக்கம்(1902), உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் வழங்கிய முனைவர் பட்டம், எடிசன் பதக்கம்(1914) போன்ற பல் வேறு சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றார்.

No comments:

Post a Comment