நூல் விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

நூல் விமர்சனம்

எல்லோருக்குமானவரே

பேராசிரியர் .கணேசன்

வெளியீடு:  பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை,

14, சோலையப்பன் தெரு,

தியாகராயர் நகர், சென்னை - 600 017.

பக்கங்கள்: 72  விலை : 20

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளரும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வணிகவியல் துறை மேனாள் பேராசிரியருமான தோழர் கணேசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் தோழர் அசோக் தாவ்லே கட்டுரையின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றின் தொகுப்பே இந்த நூல்.

சரி ஆளுகின்ற பிற்போக்கு பாசிச இந்துத்துவ சக்திகள் டாக்டர் அம்பேத்கரை இந்துத்துவ அம்பேத்கர் என்று சூழ்ச்சியாக அணைத்து அழிக்க நினைக்கும் நிலையில் இந்த நூல் டாக்டர் அம்பேத்கர் அவர்களை புதிய கோணத்தில் இந்துத்துவத்திற்கு எதிரான வராக காட்டுவதற்கான ஆயுதமாக ஆவணமாக வெளிவந்துள்ளது.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஜனநாயகம் மதச்சார்பின்மை சமூக நீதிக்கான போராளி எனும் தலைப்பிலான இந்திய விவசாய சங்க தலைவர் டாக்டர் அசோக் தவ்லே அவர்களின் கட்டுரை அண்ணல் அரசமைப்பு வரைவுக் குழுவில் தலைவராக இருந்து கொண்டுவந்த ஜனநாயகத் தத்துவம் சமத்துவ வாக்குரிமை மதச்சார்பின்மை கூட்டாட்சித் தத்துவம் அதிகாரப் பரவல் அடிப்படை உரிமைகள் ஆகிய கோட்பாடுகளை காக்கும் விதமாக செய்த அளப்பரிய பணிகளை விளக்குகிறது. மேலும் அம்பேத்கரின் பொருளாதாரப் புரட்சிக் கோட்பாடுகளையும் அதன் விளைவாக அவர் வெளியிட்ட சோசலிச கருத்துக்களையும் விளக்குகிறது. குறிப்பாக அரசும் சிறுபான்மையினரும் என்னும் பகுதியில் பொருளாதார சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு குறித்த அம்பேத்கரின் கோரிக்கையை செயல் படுத்துவதில் அரசமைப்பு சபை அக்கறை காட்டவில்லை என்பதோடு அவர் எழுதிய முக்கிய பகுதிகளை எடுத்துக்காட்டுகிறது. தொழிற்சாலைகளையும் நிலங்களையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்பதும்,  வேளாண்மையை அரசுத்துறை தொழிலாக்க வேண்டும் என்பதும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

டாக்டர் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் ஆர்எஸ்எஸ் இந்து மகாசபைக்கும் எதிரான சிந்தனையாளர்களால் இருந்தார் என்பதையும் டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த போது இந்து சட்டத் திருத்த மசோதா மூலம் இந்து சனாதன வாதிகளுக்கு எதிராக மிக முக்கியமான போராட்டத்தை முன்னெடுத்ததையும் பெண்களின் உரிமைக்கான இந்த போராட்டம் தோல்வி அடைந்த நிலையில் ஒன்றிய அமைச்சரவையில் இருந்து அவர் வெளியேறியதையும் காட்டுகிறது...“டாக்டர் அம்பேத்கருக்கும் மார்க்சியத் உள்ள தொடர்பையும் விளக்குகிறது. மேற்கண்ட கட்டுரையை மொழிபெயர்க்கும்போது அவருக்கு ஏற்பட்ட உணர்வை சிந்தனை எனும் தலைப்பில் தனிக் கட்டுரையாக வடித்துள்ளார் நூலாசிரியர் கணேசன் அவர்கள்.

மூன்றாவது கட்டுரையானஎல்லோருக்குமானவரே’’ என்னும் தலைப்பிலான கட்டுரை செறிவான செய்திகளைத் கொண்ட  ஆவணக் களஞ்சியம் ஆகும்.“இக்கட்டுரை அவர்களின் முயற்சியால் ஏற்பட்ட பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்கள், சுகாதார காப்பீட்டு திட்டங்கள் , மகளிர் நல சட்டங்கள், உள்ளிட்ட ஏராளமான தகவல்களை தருவதோடு, டாக்டர் அம்பேத்கரின் பொருளாதார தொழில்துறை வளர்ச்சி சார்ந்த சோசலிச சிந்தனைகளையும் விளக்குகிறது.

- வை.கலையரசன்

No comments:

Post a Comment