"பிரச்சார செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 21, 2021

"பிரச்சார செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்"

ஆத்தூர் கழக மாவட்டகாணொலி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

ஆத்தூர், மே 21 ஆத்தூர்  திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  16.05.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.மணி யளவில்  காணொலி மூலம் நடைபெற்றது .

இந்நிகழ்வில் வரவேற்புரையை நீ .சேகர் நிகழ்த்தித் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் .வானவில்  தலைமையேற்று நடத்தினார். நகர கழக தலைவர் வெ. அண் ணாதுரை, மாநில இளைஞரணி துணை செயலாளர் .சுரேஷ், மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி, வா. தமிழ்பிரபாகரன், பக மாவட்ட தலைவர் . முருகானந்தம், .. மாவட்ட செயலாளர் .அறிவுசெல்வம், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் சிங்கிபுரம் கூத்தன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் .

தொடக்கவுரையை மாநில அமைப்பு செயலாளர்  ஊமை.செயராமன் நிகழ்த்தினார். மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன்  சிறப்புரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் பழனி புள்ளையண்ணன், மாநில தொழிலாளர் அணி அமைப்பாளர் மு.சேகர், மண்டல தலைவர் சிந்தாமணியூர், கவிஞர் சுப்பிரமணியன், மண்டல செயலாளர் இரா.விடுதலை சந்திரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டி ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினார்கள்

இதில் மேட்டூர் மாவட்ட தலைவர் கிருட்டிணமூர்த்தி ,   மருதபழனிவேல், கந்தவேல் கலியமூர்த்தி, வேப்பம்பூண்டி இளங்கோவன், தோழர் பிரபாகரன், வழக்குரைஞர் மணிகண்டன், வழக்குரைஞர் சத்தியா, தோழர் பீட்டர் . தோழர் சத்தியமூர்த்தி, உலகநம்பி என அனைவரும் பங்கேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

பின்னர் மாவட்ட செயலாளர் நீ.சேகர் அவர்கள்  ஆத்தூர் மாவட்ட சார்பில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது .

தீர்மானம்: 1.விடுதலை சந்தா மற்றும்  இணைய வழியாக விடுதலையை பரப்புவதாக சுமார் பத்தாயிரம் நபர்களுக்கு அனுப்புவதாக நடவடிக்கை எடுக்க படுகிறது.

2. தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சுவரெ ழுத்து விளம்பரம் கிராமங்கள் தோறும் எழுத முடிவு.

3.தொழிலாளர் அணியை வலுப்படுத்த ஏற்பாடு செய்தல்.

4.புதிய தோழர்களை சேர்க்க விரைவது.

5.பிரச்சார செயல் திட்டங்கள் தொடங்குதல்.

6.பெரியார் உலகம் வசூல் பணி ஆயத்தமாகிறது.

7.மகளிர் அணியை சீர் செய்தல்.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

நன்றியுரையை .வேல்முருகன் நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment