வருமான வரி கணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 21, 2021

வருமான வரி கணக்கு தாக்கலுக்கான அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி, மே 21- கடந்த 2020--21ஆம் நிதியாண்டுக்குரிய வருமான வரி கணக்கை தனி நபர்கள் தாக்கல் செய்வதற் கான அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக் கப்பட்டுள்ளது.

தணிக்கை செய்யத் தேவையில்லாத வருமான வரி கணக் கைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ஆம் தேதியும் தணிக்கை செய்யப்பட வேண் டிய கணக்கைத் தாக்கல் செய் வதற்கு அக்டோபர் 31ஆம் தேதியும் அவகாசமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் சூழலில் வரி செலுத்துவோரின் நல னைக் கருத்தில் கொண்டு, அந்த அவகாசம் 2 மாதங்க ளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரி யம் தெரிவித்துள்ளது. அதன் படி தனிநபர்கள் வரு மான வரி கணக்கைத் தாக்கல் செய் வதற்கான அவ காசம் செப் டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நீள்ளது.

நிறுவனங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக் கப்பட்டுள்ளது. பணியாளர்க ளுக்கு வருமான வரிப் பிடித் தத்துக்கான சான்றிதழை (ஃபார்ம் 16) நிறுவனங்கள் வழங்குவதற்கான அவகாசம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு ஜூலை 15ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. வரி தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய் வதற்கான அவகாசமும் அக் டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment