வட இந்தியாவில் மட்டுமே பரவிய துப்பாக்கி தூக்கிக்கொண்டு மிரட்டும் விதமாக போஸ் கொடுக்கும் காவிகளின் கலாச்சாரம் தமிழகத்திலும் காலூன்றி உள்ளதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். சமீபத்தில் முக நூல் பக்கத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜ பெண் பிரமுகர் பற்றி கோவை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் தீவிர ஆதரவாளரான இளம்பெண் ஒருவர் துப்பாக்கியுடன் கணவர் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு அந்தப்பெண் துப்பாக்கியுடன் நின்று போட்டோ எடுத்து உள்ளதாக தெரிகிறது. இந்த போட்டோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் படம் பகிர்ந்த இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், கோவை மாநகர காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாஜக பெண் பிரமுகர், துப்பாக்கி உரிமம் வைத்துள்ளாரா? யாரையேனும் மறைமுகமாக மிரட்டும் நோக்கத்தில் இப்படி சமூக வலைதளங்களில் போட்டோ வெளியிட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பல ரவுடிகள், பட்டா கத்தியுடன் கேக் வெட்டுவது போன்ற போட்டோக்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டபோது, காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக பிரமுகர்கள் இதர கட்சியினரை மிரட்டுவதற்காகவும், தன்னை ஒரு பெரிய மனிதர் போல் மக்களிடையே காட்டுவதற்கு துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு போஸ் கொடுப்பார்கள். தற்போது தமிழகத்தில் பாஜக 4 இடங்களில் வென்றதை அடுத்து பாஜக பிரமுகர்கள் தமிழகத்திலும் இவ்வாறான வன்முறைதூண்டும் விதமாக படங்களைப் பகிர்வதை துவக்கியுள்ளனர்.
காவல்துறை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் இவர்கள் வீதிகளில் தூப்பாக்கிகளுடன் நடமாடுவார்கள். வட இந்தியாவில் அதுதான் நடந்துவருகிறது.


No comments:
Post a Comment