எந்தப் பார்ப்பானும் தேர்தலில் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறமுடியாமலும் போய்விட்டது

இந்த சீனிவாசய்யங்கார் பக்தவத்சலத்தை, “அடேய் பக்தவத்சலம்என்றுதானே கூப்பிட்டுக்கிட்டிருக்கிறார்! இந்தக் காமராசரை சத்திய மூர்த்தி அய்யர்டேய் காமராஜ்என்று தானே கூப்பிட்டுக் கொண்டிருந்தான். நம் இயக்கம் தோன்றி இந்த 40 வருடமாகத் தொண்டாற்றாமல் இருந்தால், இன்றைக்கும் பார்ப்பான் தானே ஆதிக்கத்திலிருப்பான்.

அவன் தானே ஆட்சியிலிருந்து கொண்டிருப் பான். நம்முடைய பிரச்சாரத்தால் மக்கள் உண்மையை உணர முடிந்தது. அவன் மட்டும் எதற்காகப் பார்ப்பானாக இருக்க வேண்டும். நாம் ஏன் சூத்திரனாக, நாலாஞ் சாதிக்காரனாக இருக்க வேண்டுமென்கிற எண்ணம் நம் மக்களுக்கு ஏற்பட்டு, பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி வளர ஆரம்பித்தபின் தான் பார்ப்பானின் ஆதிக்கம் ஒழிந்தது. அவனாகத் தனியே எந்தக் காரியமும் செய்ய முடியாமல் போனதோடு, எந்தப் பார்ப்பானும் தேர்தலில் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறமுடியாமலும் போய்விட்டது.

நாங்கள் இருந்ததனாலே பார்ப்பான் தயவு எங்களுக்குத் தேவையில்லை என்று அண்ணாதுரையாலே சொல்ல முடிந்தது. இல்லாவிட்டால் ஆட்டி விட்டுவிடுவானே பார்ப்பான். நம் ஆதரவு அவர்களுக்கு இருப்பதால் பயப்படுகின்றான்.

-12.6.1968 அன்று பெரம்பூர் செம்பியத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுவிடுதலை’- 29.6.1968.

Comments