இருண்ட காலம்

ஆசிரியர்: .எஸ்.அமல்ராஜ்

விலை: ரூ. 250/-

பதிப்புரிமை: .எஸ்.அமல்ராஜ்

ஹிந்துத்துவா தீவிரவாதிகள் திரை மறைவிலிருந்து இயக்கும் பார்ப்பன பயங்கரவாதம் நம் நாட்டை பிடித்திருக்கும் ஒரு பெரும்நோயாகும். பொது வெளிகளில் நாம் எல்லோரும் ஹிந்து என்பார்கள். அவர்கள் வீட்டுப்பக்கம் போய் பாருங்கள். ஆத்துக்குள் நுழைந்து விடாதேஆச்சாரம் - தீட்டு!’ என்பார்கள். இன்றும் அவர்கள் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருப்பா£ர்கள். ‘சூத்திரர்களாகிய நாம் வாய், பொத்தி, மெய்யடக்கி கீழேதான் அமர்ந்தாக வேண்டும். மோடி சர்க்காரின் கல்வி பொதுப்பட்டியல் என்ற நப்பாசை பார்ப்பனர்களின் குலக்கல்வி என்ற சர்வாதிகாரத்தின் மறுவடிவம்தான்.

ஹிட்லரின் ஒரே நாடு முழக்கம்தான் ஆர்எஸ்எஸ் மற்றும் ஹிந்துத்துவ அமைப்புகளின் ஒரே நாடு. ஒரே மதம், ஒரே மொழி என்ற முழக்கமும். ஹிந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற சங் பரிவார அமைப்புகளின் ஆரம்ப கர்த்தாக்கள் அனைவருமே ஆரியப் பார்ப்பனர்கள் தான்.

இவர்களின் உண்மை முகத்தை தோலுரிக்கும் விதமாக 28 கட்டுரைகளில் ஆரியர் இந்தியாவிற்கு வருகை தந்து, காவிகளின் அரசாங்கத்தை அமைத்து, இந்தியாவை அவர்கள் சீரழித்த கொடுமைகளை தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார் நூல் ஆசிரியர்.

இந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பமாகிவிட்டது. இந்திய ஜனநாயகத்திற்கு விடியல் உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கான விடை காண அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்!

Comments