ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     டில்லி போராட்ட களத்தில் பாரதீய கிஷான் சங்கத் தலைவர் நரேஷ் திக்கெய்ட் கூறுகையில், விவசாயிகளின் சுயமரியாதை காக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும். அழுத்தத்தின் கீழ் எதனையும் ஏற்க மாட்டோம் என்றார்.

·     அரசு சட்டத்தை இயற்றலாம். ஆனால் அதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியாது. விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்து அரசு தீர்மானம் நிறைவேற்றி, விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும் என தலையங்கச் செய்தி கூறுகிறது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

திரையரங்குகளில் இன்று முதல் 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     டில்லி அருகே சிங்கு எல்லையில் விவசாயிகளின் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் அதிக அளவில் வந்துள்ளனர். தீர்வு எட்டப்படும்வரை போராடுவோம் என அறிவித்துள்ளனர்.

·     விவசாயிகளின் தொடர் போராட்டம், அரசு மீதுள்ள நம்பிக்கை யின்மையையும், கொடுங்கோல் சட்டங்களையும் நினைவுபடுத்துகிறது என மத்திய அரசின் முன்னாள் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் கருத்திட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     விவசாயிகளின் இயக்கத்தை அடக்குவது சரி அல்ல. கடந்த நாடாளுமன்ற மழைக்கால அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த விவசாயிகளின்  பிரச்சினையை அரசு கேட்க வேண்டும் என்று மேகாலய ஆளுநர் சத்ய பால் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.

தி இந்து:

·     மாநிலங்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மாற்றி யமைக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்கு முன்னர் பிப்ரவரி 13ஆம் தேதி முடிவடையும். இது தொடர்பான முடிவு ராஜ்யசபா தலைவர் எம்.வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிகளின் மாநிலங்களவை தலைவர்களுடனான கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

·     மத்திய அரசின் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மூன்று வேளாண் மசோதாக்களில் உள்ள உண்மைகளை சரியாக தெரிவிக்கவில்லை  என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

- குடந்தை கருணா

1.2.2021

Comments