சீனாவில் வூகான் நகரில் உலக சுகாதார மய்ய வல்லுநர்கள் ஆய்வு

பெய்ஜிங், பிப்.2- சீனாவில் வூகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கும் செல்ல வல்லுநர் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அங்குதான் கரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. கரோனா வைரஸ் தோன்றியது எப்படி என ஆய்வு செய்ய சீனாவின் வூகான் நகருக்கு சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழு அங்குள்ள உணவு சந்தையை நேரில் பார்வையிட்டது.

Comments