தருமபுரி மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி மண்டலக் கலந்துரையாடல் கூட்டம் 13.2.2021 அன்று சனிக்கிழமை காலை சரியாக 10.30 மணிக்கு ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஊற்றங்கரை ரவுண்டானா அருகில் உள்ள அறிவாசான் தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் மாலை அணிவிக்க தோழர்கள் முழக்கமிட்டனர். கூட்டம் சரியாக 10.40 மணிக்கு தொடங்கியது.

"பெரியார் பிஞ்சு" 'கியூபா கடவுள் மறுப்பு கூறி தொடங்கி வைத்தார். ஊற்றங்கரை ஒன்றிய கழகத் தலைவர் செ. பொன்முடி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கூட்டத்திற்கு தருமபுரி மண்டலத் தலைவர் . தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.

கழகத்தின் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் கூட்டத்திற்கான நோக்கத்தை எடுத்துக் கூறி உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், மகளிரணி பொறுப்பாளர்கள் மு. இந்திராகாந்தி, ஜான்சிராணி, சுதாமணி, தருமபுரி மாவட்டச் செயலாளர் இளைய மாதன், தருமபுரி மாவட்டத் தலைவர் வீ. சிவாஜி, கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர் கா. மாணிக்கம், கிருட்டினகிரி மாவட்ட தலைவர் . அறிவரசன், ஓசூர் மாவட்டத் தலைவர் சு. வனவேந்தன், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் பழ. வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிடமணி, திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டியன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் எழில் சிற்றரசு, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன், முன்னிலை ஏற்றனர். தருமபுரி மண்டலச் செயலாளர் பழ. பிரபு உரையாற்றும் போது, 'விடுதலை' வாசகர் வட்டம் குறித்து விரிவான செயல்பாடுகளை விளக்கி கூறினார். திராவிட தொழிலாளரணி மாநில செயலாளர் மு. சேகர் தொழிலாளரணியை ஒவ்வொரு மாவட்டத்திலும் புதியதாக உருவாக்குவது குறித்தும், அவர்களின் நலன்கள், உரிமைகள் குறித்தும் உரையாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமன் மண்டலத்தில் உள்ள தொடர் பணிகள் குறித்தும் தெருமுனை கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் நடத்துவது போன்ற கருத்துகளை விரிவாக எடுத்துரைத்தனர். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் யாழ். திலீபன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றினார். கூட்டத்தின் நிறைவாக கழகத்தின் துணை தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றுகையில், ஒவ்வொரு கழகத் தோழரின் களப்பணி குறித்தும், மாவட்டக் கழகத்தின் செயல்பாடுகளை வேகமாக முன்னெடுத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஓரணியில் நின்று சமூகநீதியை மீட்டெடுக்க தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கூறினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தோழர்களுக்கு அறிவார்ந்த ஆய்வுரையை  நிகழ்த்தினார்.

கூட்டத்தில் மண்டல மாணவர் கழக செயலாளர் மா. செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் புலவர் இரா. வேட்ராயன், . கதிர், கோ. திராவிடமணி, பெ. கோவிந்தராஜ், சிவ. மனோகர், எம்.கே.எஸ். இளங்கோவன், . சிறீதரன், . சமரசம், ஜா.. நிலவன், இரா. ஆகாஷ், மாரி, கருணாநிதி, இரா. பழனி, சு. வெங்கடேசன், சித. அருள், இரா. கிருஷ்ணமூர்த்தி, . லூயிஸ்ராஜ், சே. ஜானகிராமன், கா. சின்னராஜ், மா. சுதா மணி, மா. மல்லிகா, கோ.தனகேசரன், வா. நடராஜன், கு. தங்கராஜ், . அமுதகொடை, இரா. வேங்கடம், அண்ணா. அப்பாசாமி, பீமா. தமிழ் பிரபாகரன், செ. சிவராஜ் மற்றும் அனைத்து கழக அணியை சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்துக் கொண்டனர்.

Comments