கும்பகோணத்தில் கழகத்தில் இணைந்த புதிய இளைஞர்கள்

குடந்தை, பிப். 1- 31.01.2021 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில்  மாவட்ட இளைஞரணி சார்பில்  "திராவிடம் வெல்லும்" என்கிற தலைப்பில் நடை பெற்ற சிறப்புக்கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தருமபுரம் ஆதினகர்த்தரை மனி தர்கள் பல்லக்கில தூக்கிசெல்லும் (பட்டினபிரவேத்தை) மனித உரி மைக்கு எதிரான செயலை கண்டித்து திராவிட கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை யில் நடைபெற்ற மறியல் போராட் டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்,  அந்த போராட் டம் வெற்றிபெற்றது. பல்லக்கில் செல்லவிருந்த ஆதினம் நடந்து சென் றார். இதனை பார்த்த கும்பகோணம் கழக மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தை சேர்ந்த அபினேஷ் என்கிற இளைஞர் தன்னையும் இயக்கத்தில் இணைத்து கொள்ள விரும்பி, 31.1.2021 அன்று நடைபெற்ற திராவிடம் வெல்லும் சிறப்புக்கூட் டத்தில் தன்னுடைய நண்பர்களான விவேகானந்தன், பிரவீன், சிறீகாந்த், நாகர்ஜுன் மற்றும் சிறீநாத் ஆகிய இளைஞர்களுடன், தஞ்சை மண்டல செயலாளர் . குருசாமி, குடந்தை மாவட்ட தலைவர் இர.கு.நிம்மதி, மாநில இளைஞரணி துணை செய லாளர் இரா.வெற்றிக்குமார், மண் டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், குடந்தை கழக மாவட்ட இளைஞரணி தலைவர் .சிவக்குமார், குடந்தை கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் .லெனின் பாஸ்கர், குடந்தை கழக மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் பெரியார் தினேஷ், ஆகியோர் முன்னிலையில்,  கழகத்தில் இணைந்தார்.

புதிய தோழர்களுக்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் பயனாடை அணி வித்து வரவேற்றார்.

Comments