அண்ணா பல்கலையில் எம்.டெக் பட்ட மேற்படிப்பிற்கு மாணவர் சேர்க்கையை நிறுத்தி மத்திய பா.ஜ.க. அரசு 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதை கைவிடவேண்டும்

முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் அறிக்கை!

சென்னை, பிப். 1- அண்ணா பல்கலைக் கழகத்தில் உயிரி  தொழில்நுட்ப எம். டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு முட்டுக் கட்டை போடுவதை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என்றும், "மத்திய அரசின் நடவடிக்கையைக் காரணம் காட்டி இந்த ஆண்டு மாணவர் சேர்க் கையே இல்லை என்று வெளியிட்டி ருக்கும் அறிவிப்பைத் திரும்பப் பெற்று, உயிரி தொழில்நுட்ப   எம்.டெக்., பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த முதல மைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்"  எனவும் தி.மு.கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 31.1.2021 அன்று விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம். டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக் னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப் புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயிரி தொழில் நுட்பவியல் துறை இந்தியாவிலேயே முதன் முதலில் 1986இல் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட் டது. முதலில் 12 எம்.டெக்., மாண வர்களுடன் தொடங்கப்பட்டு, தற் போது 45 மாணவர்கள்வரை படிக் குமளவிற்கு இத்துறை இயங்கி வரு கிறது.

உயர்படிப்பு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் மத்திய அரசு!

இதுவரை அகில இந்தியத் தேர்வு மூலம், இந்த பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற் றது. இந்த முறை அண்ணா பல் கலைக்கழகமே மாணவர் சேர்க் கையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் - தமிழகத்தில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப் படையிலேயே மாணவர்கள் சேர்க் கப்பட வேண்டும். ஆனால் மத்திய பா... அரசோ, மத்திய அரசின் இட ஒதுக் கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது. அந்த அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்தினால் மாத ஊக்கத் தொகையாக வழங்கப் படும் 12500 ரூபாயை ரத்து செய்து விடுவோம்'' என்று, இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அடம்பிடித்து   அராஜகம் செய்துள்ளது.

69 சதவிகித இடஒதுக்கீட்டைகாப்பாற்றாத .தி.மு.. அரசு!

கூட்டணிக்கு எப்போதும் காவடி தூக்கும் முதலமைச்சர் பழனிசாமி இந்த மாணவர் சேர்க்கை குறித்து பிரதமரிடம் பேசவில்லை . மாறாக "மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்புடையதல்ல என்ப தால், 2020-2021ஆம் ஆண்டில் மேற் கண்ட இரு எம். டெக்., பட்ட மேற் படிப்புகளுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடத்த முடியாமல் இருக்கி றோம் என்று அண்ணா பல்கலைக் கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பு யார் உத் தரவின் பெயரில் வெளியிடப்பட்டு உள்ளது என்பது கூடப் போடப்பட வில்லை. மாறாகஆணையின்படி' (ஙிஹ் ஷீக்ஷீபீமீக்ஷீ) என்று மட்டும் போட்டு - இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கிடை யாது என்று கூறி, 45 மாணவர்களின் எதிர்காலத்தை .தி.மு.. அரசும் - மத்திய பா... அரசும் பாழ்படுத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Institute of Eminenceஎன்ற அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப் பட்டால், 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து இல்லை" என்று இதுவரை மத்திய பா... அரசு கூறி வந்தது பச்சைப்பொய் என்பதும் - 69 சதவிகித இடஒதுக் கீட்டைக் காப்பாற்றியே தீருவோம் என்று .தி.மு.. அரசு கூறியது வெறும் ஏமாற்று வேடம் என்பதும் அம்பலமாகி விட்டது. மருத்துவக் கனவைச் சீர்குலைப்பது போல் - உயிரி தொழில்நுட்பவியல் பட்ட மேற் படிப்பு மாணவர்களின் கனவுகளை யும் சிதைக்கும் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனைக்குரியது.

எனவே, தமிழகத்தில் உள்ள இட ஒதுக் கீட்டுக் கொள்கைக்கு எதிரான தனது பிடிவாதத்தை உடனடியாக மத்திய பா.. அரசு கைவிட்டு - மேற்கண்ட எம்.டெக்., படிப்புகளுக் கும் தமிழக இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கூட்டணி வைத்துள்ள மத்திய பா... அரசுடன் பேசி, 45 மாணவர் களின் எதிர் காலத்தைக் கூடப் பாதுகாக்க முடியாமல் - இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையே இல்லை என்று அறிவித்திருப்பதைத் திரும்பப் பெற்று - 69 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் உயிரி தொழில் நுட் பவியல் துறையில் உள்ள மேற்கொண்ட இரு எம்.டெக்., பட்ட மேற்படிப்பு களுக்கும் மாணவர் சேர்க்கையை உடனடியாக நடத்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன்.

இவ்வாறு தி.மு.கழகத் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளார்.

Comments