மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி. இல்ல மணவிழா

மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன்-செந்தாமரை ஆகியோரின் மகன் .இனியன், வேதாரண்யம் வட்டம் நடுகாடு .பழனிவேல்-சீதாலெட்சுமி ஆகியோரின் மகள் .சத்யா இவர்களின் வாழ்க்கை இணையேற்பு விழா கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் 24.1.2021 அன்று காலை மயிலாடுதுறையில் நடைபெற்றது. மணவிழாவினையொட்டி ஒன்றிய தலைவர் இளங்கோவன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 (ஆயிரம்) நன்கொடையாக மாவட்டச்செயலாளர் கி.தளபதிராஜிடம் வழங்கினார். மாவட்ட தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comments