புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம்

சென்னை, ஜன. 23- இந்தியாவின் மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களின் பிராண்டான யுரேகா (Eureka Forbes) ஃபோர்ப்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய டாக்டர் அக்வாகார்ட் ஆயுர்ஃப்ரெஷ் என்ற புத்தாக்கமான தொழில்நுட்பத்துடன் தினசரி குடிநீருக்கு புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் நறுமணத்துடன் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கேரளாவின் வளமான நிலங்களி லிருந்து பெறப்பட்ட உண்மையான இயற்கை பொருள்கள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்ட இலவங்கப்பட்டை, வயிற்று கோளாறுகளைத் தடுக்கும் கருப்பு மிளகு மற்றும் கிராம்பு மொட்டுகள், சீரகம், ஏலக்காய், இஞ்சி ஆகிய பொருள்கள் இந்த சாதனத்தில் கலக்கப்பட்டுள்ளது என இந்நிறுவன முதன்மை அலுவலர் சஷாங்க் சின்ஹா தெரிவித்துள்ளார்.

புதிய வடிவமைப்பில் வாகனங்கள் அறிமுகம்

சென்னை, ஜன. 23- தனிநபர் பயன்பாட்டிற்கான பயண வாகனங் களை தயாரித்து வழங்கிவரும் பீஎம்டபுள்யூ நிறுவனம் தற்போது புதுப் பிக்கப்பட்ட புத்தாக்கமான வடிவமைப்பில் இந்நிறுவன சென்னையில் உள்ள தொழிற்சாலையில் நியூ BMW 220i என்ற வாகனத்தை தயா ரித்து அறிமுகம் செய்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டை குறைக்க உதவும் வகையில் செயல்படும் இந்த வாகனம் குறைந்த எஞ்சின் வேகத்தில்கூட தன்னிச்சையான செயல்திறன் கொண்டது என இந்நிறு வனத்தின் தலைவர் விக்ரம் பாலா தெரிவித்துள்ளார்.

Comments