கடன் தொல்லையில் சிக்கித்தவிக்கும் பஞ்சாப் விவசாயிகள்

புதுடில்லி, ஜன. 23- இந்திய தலைநகரில் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகள் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டில்லியின் எல்லைப்புறங்களில் நடைபெற்றுவரும் தீரமிகு மற்றும் பிரமாண்ட போராட்டம், 50 நாட்களை எட்டியுள்ளது. இப்போராட் டத்தில், பல விவசாயிகள் தொடர்ந்து பலியாகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பஞ்சாப் விவசாயிகளின் பொருளாதார நலன் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், கடந்த பல்லாண் டுகளாக அவர்கள் கடும் கடன் பிரச்சினையால் அவதிப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அந்த ஆய்வின்படி, பஞ்சாப் விவசாயிகளின் ஒட்டுமொத்தக் கடன் தொகை ரூ.1 லட்சம் கோடிகள் என்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தவகையில் பார்த்தால், பஞ்சாபில் ஒவ்வொரு விவசாய குடும்பத் திற்கும் சுமார் ரூ.10 லட்சம் அளவிற்கு கடன் இருக்கிறது. ஆனால், ஒரு பஞ்சாப் விவசாயக் குடும்பத்தின் சராசரி வருமானம் ரூ.6 லட்சம் மட்டுமே. இந்தக் கடன் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களிட மிருந்தும் பெறப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனக் கடன்களின் அதிக வட்டியால் விவசாயிகள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். அந்தக் கடன் திரும்ப செலுத்தமுடியாத அளவில் உள்ளது. இதை, பெரிய, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் என்றெல்லாம் பிரித்துப்பார்க்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments