அய்யா வார்த்திட்ட தலைவன்


முனைவர் அதிரடி க.அன்பழகன்


கிராம பிரச்சார அமைப்பாளர்,


திராவிடர் கழகம்.


 


கடலூர்                           முதுநகரில்                  பிறப்பு


கருங்கடலில்             பாலகனாய்                  இணைப்பு


கற்கும்போதே            கொள்கையில்           துடிப்பு - அவர்


கர்சிக்கும்                      பேச்சினில்                    நெருப்பு!


 


பகுத்தறிவுப்                பாதையில்                   தொடக்கம்


பகையதிர                     மேடையில்                 முழக்கம்


செறிவாக                      கருத்துகள்                    பிறக்கும் - அதில்


அறியாமை                  நோயளறி                      பறக்கும்


 


பெரியாரை                   பற்றிட்ட                         சிறுவன்


பேரிடியாய்                  உயர்ந்திட்ட                 அறிஞன்


அரிதாய                         தோன்றிட்ட                 தொண்டன் - அய்யா


சரியாய்                          வார்த்திட்ட                  தலைவன்!


 


இயக்கத்தை                இயக்கிடும்                   இளைஞர்


இனத்தை                      காத்திடும்                      காவலர்


எல்லாக்கும்                எல்லாமும்                  ஆக்கிட - ஆறாது


களமாடும்                     தலைவனுக்கு           என்பத்தெட்டு


வாழட்டும்                    பல்லாண்டு                 கொள்கை      வாழ்வதற்கு!


 


Comments