'நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், அதை கேட்க நீ யார்?' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 31, 2020

'நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், அதை கேட்க நீ யார்?'

 கருநாடக முன்னாள் முதல்வர்  சித்தராமையா ஆவேசம்

பெங்களூரு, டிச.31, காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாள் விழாவில் கலந்துகொண்டு கருநாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா உரையாற்றியபோது, நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், அதை கேட்க நீ யார்? பாஜகவினரை நோக்கி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பசு விவகாரத்தில் கருத் துச் சொல்ல காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பயப்படுகிறார்கள் - எனக்கு அந்த பயமில்லை. நான் மாட் டிறைச்சி சாப்பிடுவேன். உணவை தேர்வு செய்வது அவரவர் உரிமை என்றார். கருநாடக மாநில ஆளும் பாஜக அரசு அண்மையில் பசுக் களை உணவுக்காக கொல்வதை தடை செய்து, சட்டத்தை நிறை வேற்றியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாள் விழாவில் பேசிய சித்தராமையா,

நான் மாட்டிறைச்சி சாப் பிடுவேன். அதை தடுக்க நீ யார் என்ற கேள்வியை ஒருமுறை சட்டப் பேரவையிலேயே கேட்டேன். உணவை தேர்ந்தெடுப்பது எனது உரிமை. அதை கேள்வி கேட்க நீ யார். நீ உனக்கு என்ன பிடிக்கிறதோ, அதை சாப்பிடு. நான் வந்து தடுக்க மாட்டேன் என்றேன். காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜகவின் கொள் கையை ஆதரிப்பதாகவும், அதுபற்றி கருத்துச் சொல்ல அஞ்சுகின்றனர். ஆனால் தனக்கு அந்த அச்சம் இல்லை என கூறியுள்ளார். கரு நாடக அரசின் பசுவதை சட்டம் விவசாயிகளைத்தான் பாதிக்கும். வயது முதிர்ந்த பசுக்கள், எருமை களை விவசாயிகள் எங்கே அனுப் புவார்கள்? அவற்றை பராமரிக்க நாள் ஒன்றுக்கு ரூ.100 தேவைப்படும். அதனை யார் விவசாயிகளுக்கு கொடுப்பார்கள்? அவற்றை பரா மரிக்க முடியாத காரணத்தினால் தான், விவசாயிகள் இறைச்சிக்கு அவற்றை பயன்படுத்துகின்றனர் என்றார்.

கருநாடக மாநில ஆளும் பாஜக அரசின் பசுவதை தடைச் சட்டத் தால் பெரிதும் விவசாயிகள், உண வகங்கள், இறைச்சிக் கூடங்கள், தோல் தொழில்கள் என பல தரப் பட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இச்சட்டத்தை மீறுப வர்களுக்கு 5 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண் டனை விதிக்கப்படுவதோடு, ஒரு மாட்டிற்கு 50 ஆயிரம் வீதம், 5 லட் சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment