பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். என்றால் இந்நிலைதான் என்பதைப் புரிந்துகொள்வீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். என்றால் இந்நிலைதான் என்பதைப் புரிந்துகொள்வீர்!

* ‘சூத்திரன் என்றால் தேவடியாள் மகன்' என்ற பொருளிருக்கும்போது -

சூத்திரன் என்றால் ஏன் எதிர்ப்பு, ஏன் கோபம் என்று கேட்கிறார் காவி சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூர்

தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவீர்!

சூத்திரன் என்றால் இந்து தர்ம சாஸ்திரப்படி தேவடியாள் மகன் என்று பொருள் இருக்கும் நிலையில், ‘சூத்திரன் என்றால் ஏன் எதிர்ப்பு - கோபம்?' என்று ஆர்.எஸ்.எஸ். சாமியாரணி மாலேகான் குண்டுவெடிப்புப் புகழ் பிரக்யா சிங் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆர்.எஸ்.எஸின் ஜாதி ஆணவப் போக்கையும், பெரும்பாலான பார்ப்பனரல்லாதாரையும், ஒட்டுமொத்தமான பெண்களையும் ஜாதி ஆணவத்தோடு இழிவுபடுத்து வதாகும். இந்த ஆர்.எஸ்.எஸ். - பா... கும்பலுக்குத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவீர் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மும்பை மாலேகான் குண்டுவெடிப்பு - பயங்கரவாத வழக்கில் குற்றவாளியாக உள்ள பிரக்யா சிங் தாக்கூர் தன்னை ஒரு சாமியாரிணி என்று கூறிக்கொண்டு, காவி உடையுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர கொள்கையாளராக, இந்துத்துவாவின் அதிதீவிர பரப்புரையாளராக அறிமுகம் செய்துகொண்டு ஜாமீனில் உள்ள ஒருவர், இடையில் பா... அவருக்குத் தேர்தல் டிக்கெட் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினராகி, மக்களவையில் வெளிப்படையாக கோட்சேவைப் புகழ்ந்து பேசி, எதிர்க்கட்சியினர் (தி.மு.. உள்பட) பலரின் கண்டனத்திற்கு ஆளான ஒருவர்.

அவர் இரண்டு நாள்களுக்குமுன் போபாலில்க்ஷத்திரிய மஹா சபா' கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பேச்சு 13.12.2020 நாளிட்டதி இண்டியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் வெளிவந்துள்ளது!

ஜாதி ஆணவப் பேச்சு

‘‘நமது சமூகம்பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர' என்று நால் வருணமாக பகுக்கப்பட்டிருக்கிறது என்பது மனுதர்ம சாஸ்திரங்கள் கூறும் ஏற்பாடு.

இதன்படி க்ஷத்திரியர்களை, ‘க்ஷத்திரியர்கள்' என்று அழைக்கும்போது, அவர்கள் ஒன்றும் சங்கடப் படுவதில்லை. பிராமணர்களை, ‘பிராமணர்கள்' என்று அழைக்கும்போது அவர்கள் வருத்தப்படுவதில்லை. வைசியர்களை, ‘வைசியர்கள்' என்று அழைக்கும்போது மனம் வருந்துவது இல்லை. சூத்திரர்களை, ‘சூத்திரர்கள்' என்று அழைக்கும்போது மட்டும் மனம் வருந்துவதும், எதிர்ப்புக் காட்டுவதும் ஏன்? இது அவர்களுக்கு உள்ள அறியாமையைக் காட்டுகிறது'' என்று ஆணவத்தோடு  கூறியுள்ளார்!

பா... எப்படிப்பட்டகோட்சே பக்தர்களையும், வருணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் வன்னெஞ்சர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது' என்பதற்கு - ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல் - இது ஆதாரம் ஆகும்!

சூத்திரன் என்றால் என்ன பொருள்?

நால் வருணத்தை - ஜாதிப் பிரிவை எவ்வளவு சர்வ சாதாரணமாக - ‘சூத்திரர்' என்றால், ஏன் ஆத்திரப்படவேண்டும் என்று கேட்கும் இவருக் குள்ளதுதான் ஆணவத்தின் அறியாமையின் உச்சம்!

காரணம், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் எனப்படுவோர் (மூன்று பிரிவு)  மனுதர்மப்படி உயர்ந்த ஜாதியினர்; அடுக்குப் படிக்கட்டு ஜாதி முறையில் மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறபடி, ஒருவருக்குக் கீழ் மற்றொருவர் என்ற Graded Inequality என்று அமைக்கப்பட்டுள்ளதில், சூத்திரர் மற்ற மூன்று ஜாதியினருக்கும் குற்றேவல் செய்யும் அடிமை பணிக்காகவே பிரம்மாவினால் காலில் பிறக்கப்பட்டவர்கள்.

அவன் அடிமையானபடியால், கல்வி, மண உரிமை, சொத்துரிமையாகிய எதுவும் அவனுக்குக் கிடையாது.

சூத்திரன்' என்றால் என்ன பொருள் என்பதற்கு மனுதர்மத்தின் எட்டாவது அத்தியாயம், 415 ஆவது சுலோகம் கூறுவது இதோ:

1. யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்

2. பக்தியினால் வேலை செய்கிறவன்

3. தன்னுடைய தேவடியாள் மகன்

4. விலைக்கு வாங்கப்பட்டவன்

5. குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்

6. ஒருவனால் கொடுக் கப்பட்டவன்

7. குற்றத்திற்காக வேலை செய்கிறவன்

என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்.

416 ஆவது சுலோகம்:

‘‘மனையாள், பிள்ளை, வேலைக்காரன் - இவர்களுக்குப் பொருள் சுவாதீனமில்லை. இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும், அவை அவர்களின் எஜமானனையே சாரும்; அதாவது எஜமானன் உத்தரவின்றி தரும விஷயத்திற்கும் தங்கள் பொருளைச் செலவழிக்கக் கூடாது'' என்ற கருத்தாகும்.

417 ஆவது சுலோகம்:

‘‘பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ளலாம். எஜமான் எடுத்துக்கொள்ளத் தக்க பொருளை உடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரரல்ல.''

ஒட்டுமொத்த பெண்களையும் அவமதிப்பதுதானே!

இதைப் படிக்கும் மனிதர்கள் எவராயினும் ரத்தம் கொதிக்காதா? ரோஷம் பீறிடாதா? மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்களை கேவலப்படுத்தி, மானத்தையும், அறிவையும் பறித்து, ஒரு உழைக்காத உயர்ஜாதி எஜமானர்கள்முன் அம்மக்கள் எப்போதும் மண்டியிட்டுததாஸ்து' பாடி காலடியில் இருப்பதுதான் தர்மமா? ‘சூத்திரன்' என்ற சொல் எவ்வளவு இழிதகைச் சொல்! ‘சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி!' என்று முழங்கிய தந்தை பெரியார் மண்ணில் வெடித்துக் கிளம்பியது இந்த அடிப்படையில்தான். சூத்திரன் என்பவனை மட்டும் இழிவுபடுத்தவில்லை. ‘தேவடியாள் மகன்' என்று அழைப்பதன்மூலம் அந்த சமூகத்தின் பெண் குலத்தையே அவதூறுக்கும், அவ மானத்துக்கும் ஆளாக்குவதைக் கண்டு பெண்ணினம் - சொரணையுள்ளதாக இருந்தால் - வெகுண்டெழுந்து இந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அநீதி என்று கண்டித்திருக்க வேண்டாமா?

அறியாமையில் உளறும் இந்த ஜாமீன் சாமி யாரிணிக்கு மற்றொன்றையும் ஆதாரத்துடன் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

இராமானுஜ தாத்தாச்சாரியார்

என்ன சொல்லுகிறார்?

ஹிந்து மதம் எங்கே போகிறது?' என்ற நூலை எழுதிய 101 வயது நிரம்பிய, அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார், மனுவில் உள்ள மற்றொரு சுலோகத்தையும் சுட்டிக்காட்டுகிறார், பெண்களுக்கு.

‘‘பெண்கள் எல்லோருமே சூத்திர ஜாதிதான் - பிராமணப் பெண்கள், வைசியப் பெண்கள், க்ஷத்திரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. அதனால், சூத்திரன் வெளியே உழைப்பதைப்போல, சூத்திரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.

அதாவது,

ஸ்த்ரீனாந்த சூத்திர ஜாதி னாம்''

பெண்கள் அனைவரும் சூத்திர ஜாதி

நஸ்த்ரீ சூத்தர வேத மத்யதாம்'

அதனால் பெண்களும், சூத்திரர்களும் வேதங்களை ஓதக்கூடாது.

வேத ஓசையைக் கேட்கக் கூடாது. யாகங்கள் நடந்தால்.... அதில் ஓதப்படும் வேத மந்திரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது.

அவர்கள் வெளியில் போகவும் முடியாது.''

(இவர் சாமியாரிணி  ஆகவும் சாஸ்திரப்படி உரிமை இல்லை - எம்.பி., ஆனதும்கூட சாஸ்திர விரோதம். அதைவிட பெரிய குண்டுவெடிப்பு சதி வழக்கில் குற்றவாளியாக ஆனதும் அதைவிட எவ்வளவு பெரிய சாஸ்திர விரோதம் - சட்ட விரோதம் பிறகு!)

‘‘ஸ்திரீதாம உபநயனஸ்தானே

விவாஹம் மனு ரப்ரவீத்''

அதாவது பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சமஸ்காரங்களும் கிடையாது.''

(பக்கம் 170-171)

ஆர்.எஸ்.எஸ். காவிகளைப் புரிந்துகொள்ளுங்கள்!

கோட்சேபக்தை'யான இந்த சாமியாரிணி அம்மையார் இட ஒதுக்கீடுபற்றி- சமூகநீதிபற்றி என்ன கூறுகிறார்? அதையும் தெரிந்து கொண்டால் ஆர்.எஸ்.எஸ். - பா... காவிக் கட்சியின் உண்மை உருவம் ஒடுக்கப்பட்டோருக்கு - விளங்கவே செய்யும்.

‘‘இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் மட்டும்தான் இருக்கவேண்டுமாம்!''

‘‘மக்கள் தொகைக் கட்டுப்பாடு தேச விரோத கூட்டத்தினருக்கு மட்டும்தான் இருக்கவேண்டும். தேசத்தை வளர்ப்பவர்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு கூடாது'' என்கிறார்.

பார்த்தீர்களா?

ஆர்.எஸ்.எஸ். - பா... - காவிகளைப் புரிந்து கொள்ளுங்கள்!

இந்தக் கும்பலை அடையாளம் கண்டு தேர்தலில் தக்கப் பாடம் புகட்டுவீர்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

15.12.2020

No comments:

Post a Comment