சென்னை,டிச.20, கரோனா ஊரடங்கால் சென்னையில் சாலையோரம் வசித்த 71% சதவீதம் குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பு இழந்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கரோனா
தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் மூலம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனால் அனைத்து பள்ளிகளும் மூடப்பட் டது. தற்போது, ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கும் முறை அமல் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. சென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 71 சதவீதம் பேர் ஊடரங்கு
காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. இதன்படி ஊரடங்கு காலத்தில் சென்னயில் சாலை யோரம் வசிக்கும் குழந்தைகளில் கல்வி நிலை தொடர்பாக நகர்புற ஏழைகளுக்கான தகவல் மற்றும் ஆராய்ச்சி மய்யத்தை சேர்ந்த வெனிசா பீட்டர் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்.
இதில்
52 ஆண் குழந்தைகள் மற்றும் 48 பெண் குழந்தைகள் என்று 100 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்
47 குழந்தைகள் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிப்பவர்கள். 46 குழந்தைகள் 6ம் வகுப்பு முதல்
10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள். 7 குழந்தைகள் 11 மற்றும் 12ஆம் வகுப்பு படித் தவர்கள். இதில் 86 சதவீதம் பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 27 சதவீதம் குழந் தைகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும், 5 சதவீதம் குழந் தைகள் தனியார் பள்ளிகளிலும் படித்து வந்தவர்கள். இதல் 71 சதவீதம் மாணவர்கள் ஊரடங்கு காலத்தில் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாதது, பயன்படுத்த தெரியவில்லை உள் ளிட்ட பல்வேறு காரணங்களுக் காக கல்வி தொடர முடியவில்லை என்று குழந்தைகள் தெரிவித் துள்ளனர்.
சென்னை
பள்ளிகளில் படித்த 27 மாணவர்களில் 5 பேருக்கு மட்டும் ஆன்லைன் கல்வி கிடைத் துள்ளது. 22 பேருக்கு கல்வியை தொடரும் வாய்ப்பு கிடைக்க வில்லை.
இவர்களில்
13 குழந்தை களுக்கு ஸ்மார்ட் போன் கிடைக்க வில்லை. 9 குழந்தைகளின் பெற் றோர்களுக்கு ஆன்லைன் கல்வி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கல்வி
தொடர முடியாதற்கு
காரணம்
என்ன?
ஸ்மார்ட்
போன் பயன்படுத்த தெரியவில்லை _- 1%, ஸ்மார்ட் போன் இல்லை -_ 25%, பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தவில்லை _- 36%, படிப்பை பாதியில் நிறுத்தியது - _ 3%, கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை -_ 6% -மொத்தம் -_ 71%.

No comments:
Post a Comment